விளையாட்டு

#5in1_Sports “உலகத்தில் உள்ள எந்த மைதானத்திலும் அவர் சிக்சர் அடிப்பார்”: சஞ்சு சாம்சனை பாராட்டிய பிரபலம்!

சஞ்சு சாம்சனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டி உள்ளார்.

#5in1_Sports “உலகத்தில் உள்ள எந்த மைதானத்திலும் அவர் சிக்சர் அடிப்பார்”: சஞ்சு சாம்சனை பாராட்டிய பிரபலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. ஆஸ்திரேலியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. மழையால் ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 45 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது.

இதனையடுத்து 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

2. கால்இறுதிக்கு முன்னேற்றம்!

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கியை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் கோரி காப்பை விரட்டியடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் பெட்ரோ மார்டினஸ்சை வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார்.

3. போட்டி தள்ளிவைப்பு!

3-வது பெண்கள் புரோ ஆக்கி லீக் தொடரில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2 லீக் ஆட்டங்கள் புவனேஸ்வரில் வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் நடக்க இருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து ஆக்கி அணி வீராங்கனைகளில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போட்டி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#5in1_Sports “உலகத்தில் உள்ள எந்த மைதானத்திலும் அவர் சிக்சர் அடிப்பார்”: சஞ்சு சாம்சனை பாராட்டிய பிரபலம்!

4. “உலகத்தில் உள்ள எந்த மைதானமாக இருந்தாலும் அவர் சிக்சர் அடிப்பார்”

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 5 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். இந்நிலையில் சஞ்சு சாம்சனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டி உள்ளார். சஞ்சு சாம்சன் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாம்சனின் ஆட்டம் அருமையாக இருந்தது. உலகத்தில் உள்ள எந்த மைதானமாக இருந்தாலும் அவரால் சிக்சர் அடிக்க முடியும். மேலும் அவரது ஷாட் தேர்வு மிகவும் சிறப்பாக இருந்தது.சாம்சன் கூடுதலாக 5 ஓவர் களத்தில் இருந்திருந்தால் ராஜஸ்தான் அணி 230 ரன்கள் வரைக்கு எடுத்திருக்க முடியும். என்று ரவி சாஸ்திரி கூறினார்.

5. 2ம் இடத்தை பிடித்த பாபர் அசாம்!

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லாகூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அரை சதமடித்து, 57 ரன்னில் வெளியேறினார். சர்வதேச கிரிக்கெட்டில் பல புதிய சாதனைகளை நிகழ்த்திவரும் பாபர் அசாம், இந்தப் போட்டியின் மூலம் 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். தனது 82வது சர்வதேச ஒருநாள் இன்னிங்ஸில் 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை விரைவாக எட்டிய வீரர்களில் ஹாஷிம் ஆம்லாவிற்கு அடுத்து 2ம் இடத்தை பிடித்துள்ளார் பாபர் அசாம்.

banner

Related Stories

Related Stories