விளையாட்டு

‘WTC’ கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்.. புதிய மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனை படைத்த அஸ்வின் !

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் அஸ்வின் படைத்துள்ளார்.

‘WTC’ கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்.. புதிய மைல்கல்லை எட்டி   வரலாற்று சாதனை படைத்த அஸ்வின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இலங்கைக்கு எதிரான 2டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வெற்றி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு கீழ் வரும் இதில், இந்திய அணி 77 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

இந்த தொடரின் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் புதிய சாதனையை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான 2டெஸ்டிலும் அபாரமாக பந்துவீசிய அஸ்வின், 2வது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 100 விக்கெட்டுகளை எட்டி, இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற வரலாற்றை அஸ்வின் படைத்தார்.

அறிமுக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், 14 போட்டியில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த இவர், நடப்பாண்டு நடைபெற்று வரும் தொடரில் 7 போட்டியில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இலங்கையுடனான 2வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் எடுத்ததன் மூலம், மொத்தமாக 21 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இதுதவிர, டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 440 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 8வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில், கும்பிளேவிற்கு பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் அண்மையில் படைத்திருந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 100 விக்கெட்டை எட்டிய முதல் வீரர் என்ற நிகழ்வை அரங்கேற்றிய அஸ்வினுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

banner

Related Stories

Related Stories