விளையாட்டு

”நான் நினைச்சத விட வேற மாதிரியானவர் தோனி” - டு பிளசிஸ் கூறியது என்ன? வைரலாகும் வீடியோ!

தோனியின் கேப்டன்சி முற்றிலும் எதிர்பாராததாக இருந்தது என மனம் திறந்து பேசியுள்ளார் டுபிளசிஸ்.

”நான் நினைச்சத விட வேற மாதிரியானவர் தோனி” - டு பிளசிஸ் கூறியது என்ன? வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தோனியின் கேப்டன்சி முற்றிலும் எதிர்பாராததாக இருந்தது. தன்னால் அவரை போல் கேப்டனாக செயல்பட முடியாது என்றும், அவர் ஒரு சிறந்த தலைவன் என்றும், சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய ஆர்.சி.பி கேப்டனுமான டு பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

15வது ஐ.பி.எல் சீசன் கிரிக்கெட் தொடர் நடப்பு ஆண்டு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பல புதிய மாற்றங்களுடன் அரங்கேறவுள்ள நடப்பு ஐ.பி.எல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு டு பிளசிஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அணிக்காக 2011 முதல் 2021 ஆம் ஆண்டு சீசன் வரை விளையாடியுள்ள டு பிளசிஸ், 2 ஆண்டுகள் சென்னை விளையாட தடை செய்யப்பட்ட போதிலும், 2016, 17ல் புனே அணிக்காக தோனி தலைமையில் விளையாடினார்.

கடந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல டு பிளசிஸ் முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில், நடப்பாண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் 7 கோடி ரூபாய்க்கு டு பிளசிஸை வாங்கிய பெங்களூரு அணி, அவரை அண்மையில் அணியின் கேப்டனாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கேப்டன் பதவி அளித்ததற்கு பிறகு தோனியுடனான தனது அனுபவம் குறித்து பேசிய டு பிளசிஸ், என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் சில அருமையான கேப்டன்களை சுற்றி இருந்தது குறித்து பெருமையடைகிறேன். 10 ஆண்டுகளாக தோனி மற்றும் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஆகிய இரு அருமையான கேப்டன்களுடன் பயணித்துள்ளேன். என்னுடைய பாணியும், தோனியின் பாணியும் வேறு வேறு. ஆனால், நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான சுபாவம் கொண்டவர்கள்.

நான் சென்னை அணிக்காக விளையாட தொடங்கிய போது, தோனியின் கேப்டன்சி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. ஆனால், நான் நினைத்ததற்கு முழுவதும் எதிரானதாக அவரது கேப்டன்சி பண்பு இருந்தது. ஒவ்வொருவரின் கேப்டன்சியிலும் வெவ்வேறு பாணிகள் இருக்கும். ஆனால், சொந்த பாணியை செயல்படுத்துவது அவசியம் என்ற டுபிளசிஸ், நெருக்கடியான நேரத்தில் அது தானாக வெளிப்படும் என்றார்.

”நான் நினைச்சத விட வேற மாதிரியானவர் தோனி” - டு பிளசிஸ் கூறியது என்ன? வைரலாகும் வீடியோ!

போட்டியின் போது, இக்கட்டான நேரத்தில் அவரவர் கேப்டன்சியில் இருந்து சொந்த முடிவு எடுக்க வேண்டும் என்று பேசிய டுபிளசிஸ், நான் தோனியும் அல்ல, விராட் கோலியும் அல்ல, ஆகையால் அவர்களை போல் என்னால் இருக்க முடியாது என்று பேசினார்.

ஆனால், தோனியிடம் இருந்து தான் கற்றுக்கொண்டது அதிகம் என்றும், தன்னுடைய கேப்டன் பதவிக்கு இது உறுதுணையாக இருக்கும் என்றும், டுபிளசிஸ் கூறியுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து மார்ச் 27ஆம் தேதி விளையாடுகிறது.

banner

Related Stories

Related Stories