விளையாட்டு

மார்ச் 26ல் துவங்கும் 15வது ipl சீசன்.. முதல் போட்டியில் csk vs kkr : முழு அட்டவணை இதோ!

15வது சீசனுக்கான ஐ.பி.எல் போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ.

மார்ச் 26ல் துவங்கும் 15வது ipl சீசன்.. முதல் போட்டியில் csk vs kkr : முழு அட்டவணை இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் மெகா ஏலம் கடந்த மாதம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சுமார் 200 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 15வது ஐ.பி.எல் சீசனுக்கான போட்டி அட்டவணையை இன்று பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

மார்ச் 26ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கான ஆவல் அதிகரித்துள்ளது. அடுத்தநாள் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.

மேலும் வழக்கமாக நடைபெறுவதுபோல் ஒரேநாளில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7,30 மணிக்கும் தொடங்குகிறது.

கடந்த ஐ.பி.எல் போட்டிகளில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்று விளையாடி வந்தன. இம்முறை கூடுதலாக இரண்டு அணிகள் புதிதாகக் களம் இறக்கப்பட்டுள்ளது. குஜராத் அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலும், லக்னோ அணி கேஎல் ராகுல் தலைமையிலும் களமிறங்கவுள்ளன.

மார்ச் 26ல் துவங்கும் 15வது ipl சீசன்.. முதல் போட்டியில் csk vs kkr : முழு அட்டவணை இதோ!

இந்த அணிகளுக்கான போட்டி மார்ச் 28ம் தேதி நடைபெறுகிறது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்திலேயே அணைத்து ஐ.பி.எல் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்கள் அந்தந்த அணிகளில் மாநிலங்களில் ஒன்றிரண்டு போட்டிகள் இருக்கும்.

இதனால் ரசிகர்கள் தங்கள் அணிக்கு உற்சாகமாக ஆதரவு கொடுப்பார்கள். இந்த முறை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானங்களிலேயே அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 26ம் தேதி தொடங்கும் லீக் போட்டிகள் மே 22ம் தேதி வரை 58 நாட்கள் நடைபெற உள்ளது. மொத்த 70 போட்டிகள் இந்த தொடரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories