விளையாட்டு

Kohli 100.. அடிலெய்டு முதல் மும்பை வரை : கோலி ஆடிய வெறித்தனமான 5 டெஸ்ட் இன்னிங்ஸ்கள்!

விராட் கோலி தனது 100 வது டெஸ்ட் போட்டியில் இன்று இலங்கைக்கு எதிராக ஆடிக்கொண்டிருக்கிறார்.

Kohli 100.. அடிலெய்டு முதல் மும்பை வரை : கோலி ஆடிய வெறித்தனமான 5 டெஸ்ட் இன்னிங்ஸ்கள்!
Gareth Copley
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது 100 வது டெஸ்ட் போட்டியில் இன்று இலங்கைக்கு எதிராக ஆடிக்கொண்டிருக்கிறார். உலகளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடும் 71 வது வீரர் கோலி. இந்நிலையில், இந்த 100 டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடிய சிறப்பான 5 இன்னிங்ஸ்களை பற்றிய அலசல் இங்கே...

141 Vs ஆஸ்திரேலியா 2014

2014-15 இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி அது. அடிலெய்டில் நடந்த அந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலுமே கோலி சதமடித்திருப்பார். குறிப்பாக, இரண்டாவது இன்னிங்ஸில் அவர் அடித்த சதம் இந்திய கிரிக்கெட்டின் அணுகுமுறையையே மாற்றியிருந்தது. மேலும், கோலி கேப்டனாக பொறுப்பேற்று ஆடிய முதல் போட்டியும் அதுதான். அந்த போட்டியில் கடைசி ஒரு நாள் மீதமிருக்கையில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு 364 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கும். கடைசி ஒரு நாளில் இவ்வளவு பெரிய டார்கெட்டை சேஸ் செய்ய பல அணிகளும் யோசிக்கும். குறிப்பாக, அதற்கு முந்தைய தோனி தலைமையிலான இந்திய அணி குறைந்தபட்சமாக ட்ரா செய்தாலே போதும் என்கிற மனப்பான்மையுடதாகத்தான் இருந்தது. ஆனால், கோலி இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும் என சக பேட்ஸ்மேன்களை வெற்றிக்காக ஆட சொன்னார். சொன்னதோடு மட்டுமல்லாமல் அவரே முன் நின்று 80+ ஸ்ட்ரைக் ரேட்டில் சதமடித்து 141 ரன்களை எடுத்திருப்பார். இன்னும் கொஞ்ச நேரம் நின்றிருந்தால் கோலியே அந்த போட்டியை வென்று கொடுத்திருப்பார். அந்த போட்டியை இந்தியா தோற்றிருந்தாலும் அதுவரையிலான இந்திய அணியின் தற்காப்பு மனநிலையை மாற்றியதில் கோலியின் இந்த இன்னிங்ஸிற்கு முக்கிய இடமுண்டு.

Kohli 100.. அடிலெய்டு முதல் மும்பை வரை : கோலி ஆடிய வெறித்தனமான 5 டெஸ்ட் இன்னிங்ஸ்கள்!

149 Vs இங்கிலாந்து 2018

2014 இங்கிலாந்து சுற்றுப்பயணம் கோலிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அந்த தொடர் முழுவதுமே கடுமையாக சொதப்பியிருந்தார். ஆண்டர்சன் கோலியின் விக்கெட்டுகளை சுலபமாக வீழ்த்தியிருந்தார். அதே கோலி 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த போது இங்கிலாந்தின் அத்தனை பௌலர்களையும் சொல்லி அடித்தார். குறிப்பாக, ஆண்டர்சனை மிகச்சிறப்பாக எதிர்கொண்டார். எட்பஸ்டனில் நடந்த போட்டியில் நிதானமாக ஆடி இங்கிலாந்து மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்து 149 ரன்களை எடுத்திருந்தார். அந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராகவும் கோலியே இருந்தார்.

169 Vs ஆஸ்திரேலியா 2014

அடிலெய்டு சம்பவத்திற்கு பிறகு மெல்பர்னில் வைத்து கோலி நிகழ்த்திய இன்னொரு அட்டகாசமான சம்பவம் இது. ஆஸ்திரேலிய தொடர் என்றாலே வீரர்கள் முட்டி மோதிக்கொள்ளும் ஸ்லெட்ஜ்ஜிங்குகளுக்கு பஞ்சமே இருக்காது. கோலியும் துடிப்பான விரைப்பான ஆள் என்பதால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஈடுகொடுத்து ஸ்லெட்ஜ்ஜிங்கில் ஈடுபடுவார். அந்த வகையில் கோலிக்கும் ஜான்சனுக்கும் இடையில் பயங்கர வார்த்தை மோதல்கள் அரங்கேறியிருந்தது. அப்போது மெல்பர்னில் நடந்த அந்த போட்டியில் அந்த ஒரு இன்னிங்ஸில் அடித்த 169 ரன்களில் ஜான்சனுக்கு எதிராக மட்டும் 73 பந்துகள் 68 ரன்களை கோலி எடுத்திருப்பார். கோலியின் வெறித்தனமான இன்னிங்ஸ்களில் அதுவும் ஒன்று.

Kohli 100.. அடிலெய்டு முதல் மும்பை வரை : கோலி ஆடிய வெறித்தனமான 5 டெஸ்ட் இன்னிங்ஸ்கள்!

235 Vs இங்கிலாந்து 2016

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது நடந்த போட்டி அது. முழுக்க முழுக்க ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்திருந்த மும்பை பிட்ச்சில் முதலில் பந்துவீசிய இந்திய சார்பில் அஷ்வினும் ஜடேஜாவும் மட்டுமே இங்கிலாந்தின் அத்தனை விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருப்பர். எடக்கு மடக்காக பந்து திரும்பிய அந்த பிட்ச்சில் இந்தியா பேட்டிங் ஆடிய போது கோலி மிகச்சிறப்பாக இங்கிலாந்து ஸ்பின்னர்களை எதிர்கொண்டு இரட்டை சதம் அடித்திருப்பார். கோலியின் இரட்டை சதத்தால் இந்தியா முதல் இன்னிங்ஸிலேயே 600+ ரன்களை எடுக்க அந்த போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி கிடைத்திருக்கும்.

119 Vs தென்னாப்பிரிக்கா 2013

2013 இல் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஆடிய இன்னிங்ஸ் இது. பவுன்சர்களுக்கு பெயர் போன தென்னாப்பிரிக்காவின் ஜோஹனஸ்பர்க் பிட்ச்சில் டேல் ஸ்டெய்ன் மற்றும் மோர்னே மோர்கல் போன்ற உலகத்தரமான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு கோலி ஆடிய மிகச்சிறப்பான இன்னிங்ஸ் இது. டெஸ்ட் கரியரின் தொடக்கத்திலேயே இப்படி ஒரு சிறப்பான இன்னிங்ஸை ஆடியதை பார்த்து கிரிக்கெட் உலகமே ஆச்சர்யமுற்றது.

banner

Related Stories

Related Stories