விளையாட்டு

ஷேன் வார்னேவின் கடைசி ட்வீட் என்ன தெரியுமா..? - ஒரே நாளில் உலகை விட்டுப் பிரிந்த கிரிக்கெட் ஜாம்பவான்கள்!

ஷேன் வார்னே தனது கடைசி ட்வீட்டில் கிரிக்கெட் ஜாம்பவான் ராட் மார்ஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.

ஷேன் வார்னேவின் கடைசி ட்வீட் என்ன தெரியுமா..? - ஒரே நாளில் உலகை விட்டுப் பிரிந்த கிரிக்கெட் ஜாம்பவான்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தனது கடைசி ட்வீட்டில் கிரிக்கெட் ஜாம்பவான் ராட் மார்ஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.

ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வார்னே மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பு காரணமாக ஷேன் வார்னே இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷேன் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் எனும் என்கிற சாதனை படைத்தவர் ஷேன் வார்னே.

இன்று காலைதான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ராட் மார்ஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ஷேன் வார்னே.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ராட் மார்ஷ் (74) உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஷேன் வார்னே, ”ராட் மார்ஷ் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு வருத்தமாக உள்ளது. அவர் எங்கள் கிரிக்கெட்டின் ஜாம்பவான் மற்றும் பல இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக இருந்தார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மற்றொரு ஜாம்பவானான ஷேன் வார்னேவும் மாரடைப்பால் காலமான செய்தி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஷேன் வார்னே மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷேன் வார்னே காலமான செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories