விளையாட்டு

சுழற்பந்து ஜாம்பவான் ஷேர்ன் வார்னே மாரடைப்பால் காலமானார்... போராடியும் காப்பாற்ற முடியவில்லை என தகவல்!

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மாரடைப்பால் காலமானார்.

சுழற்பந்து ஜாம்பவான் ஷேர்ன் வார்னே மாரடைப்பால் காலமானார்... போராடியும் காப்பாற்ற முடியவில்லை என தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சுழற்பந்து ஜாம்பவான் ஷேர்ன் வார்னே மாரடைப்பால் இன்று காலமானார்.

52 வயதான ஷேன் வார்னே ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பு காரணமாக ஷேன் வார்னே இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷேன் வார்னே தனது பங்களாவில் சுய நினைவின்றி கிடந்தது கண்டறியப்பட்டதாகவும், உரிய மருத்துவ உதவிகள் வழங்கியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷேன் வார்னே மறைவு குறித்து அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷேன் வார்னே காலமான செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனுக்குப் பிறகு அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜாம்பவான் ஷேன் வார்னே. ஷேன் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் விக்கெட்கள் எடுத்தவர் என்கிற சாதனை படைத்தவர் ஷேன் வார்னே. 2005-ல் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்கள் எடுத்திருந்தார் வார்னே.

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல் டி20 கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார் ஷேன் வார்னே.

ஐ.பி.எல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஷேன் வார்னே களமிறங்கிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories