விளையாட்டு

உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வென்ற 16 வயது தமிழக சிறுவன் : யார் அந்த பிரக்யானந்தா?

மாஸ்டர் செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உலகத்தை ஆச்சரியப்படுத்தியுள்ளார் தமிழ்நாட்டு சிறுவன் பிரக்ஞானந்தா.

உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வென்ற 16 வயது தமிழக சிறுவன் : யார் அந்த பிரக்யானந்தா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆன்லைன் வழியாக ஏர்திங்ஸ் மாஸ்டர் ரேபிட் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் உலகில் முழுவதும் இருந்து 16 வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா பங்கேற்றுள்ளார்.

இந்தப் போட்டியின் எட்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். இதில் கார்ல்சனே வெற்றிபெறுவார் என உலகமே எதிர்ப்பாத்திருந்த சிலையில் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் பிரக்ஞானந்தா.

கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39ஆவது நகர்த்தலின்போது கார்ல்சனை தோர்கடித்து வெற்றியை வசமாக்கியுள்ளார். இதன் மூலம் தோல்வியே கண்டிராத கார்ல்சனுக்கு முதல் தோல்வியைப் பரிசாகக் கொடுத்துள்ளார். இது பிரக்ஞானந்தா இந்த தொடரில் இரண்டாவது வெற்றியாகும்.மொத்தம் 8 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தில் உள்ளார்.

உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வென்ற 16 வயது தமிழக சிறுவன் : யார் அந்த பிரக்யானந்தா?

உலக ஜாம்பவானையே தோற்கடித்த சிறுவன் பிரக்ஞானந்தாவின் கதையை சுருக்கமாகப் பார்ப்போம். சென்னையைச் சேர்ந்தவர் பிரக்ஞானந்தா. சிறு வயதில் தனது அக்கா செஸ் பயிற்சிக்குச் செல்வதைப் பார்த்து பிரக்ஞானந்தாவும் சென்றுள்ளார். இப்படிதான் இவரின் செஸ் வாழ்க்கை துவங்கியுள்ளது.

தனது 5வது வயதில் முதல் செஸ் போட்டியில் கலந்துகொள்கிறார். பின்னர் 7 வயதில் எட்டு வயதுக்குப்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். 10 வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றார். தற்போது 16வது உலக செஸ் ஜாம்பவானை வீழ்த்தி அசத்தியுள்ளார் பிரக்ஞானந்தா. விஸ்வநாதன் ஆனந்த் பல முறை கார்ல்சனே எதிர்கொண்டு தோல்வி கண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories