விளையாட்டு

“ஒருநாளும் என் மகன் விளையாடுவதை நேரில் பார்க்க மாட்டேன்” : சச்சின் கூறியது ஏன் தெரியுமா?

என் மகன் கிரிக்கெட் விளையாடுவதை நேரில் சென்று பார்க்கமாட்டேன் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

“ஒருநாளும் என் மகன் விளையாடுவதை நேரில் பார்க்க மாட்டேன்” : சச்சின் கூறியது ஏன் தெரியுமா?
Pal Pillai / IPL / SPORTZPICS
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன். இவர் 19 வயதுடையோருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும் மும்பை அணிக்காக உள்நாட்டுத் தொடர்களில் விளையாடி வருகிறார். அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் மும்பை அணி அர்ஜூனை ரூ.30 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.

இந்நிலையில் தன் மகன் விளையாடியதை இதுவரை நான் ஒருமுறைகூட பார்த்ததில்லை என பேட்டி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்து கூறியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சச்சின் கூறுகையில், "பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கும்போது அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனால்தான் என் மகன் அர்ஜூன் விளையாடும் போட்டிகளை நான் பார்ப்பதில்லை.

அவன் விளையாட்டை சுதந்திரமாக விளையாட வேண்டும். விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். ஒருவேளை அவனது போட்டியை காண நேர்ந்தால் யாருக்கும் தெரியாமல், மறைவான இடத்திலிருந்தே பார்ப்பேன். நான் எங்கிருந்து பார்க்கிறன் என்பது எனது மகனுக்கும், அவரது பயிற்சியாளர்களுக்கும் கூட தெரியாமல் இருக்கும்.

நாங்கள் அர்ஜூனை கிரிக்கெட்டிற்குக் கொண்டு வரவில்லை. அவனே விருப்பப்படிதான் இந்த இடத்திற்கு வந்துள்ளான். முதலில் அவர் கால்பந்து விளையாடினான். பின்னர் செஸ் விளையாடினான்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories