விளையாட்டு

திடீரென சரிந்து கீழே விழுந்த ஏலதாரர்... தடைபட்ட IPL மெகா ஏலம் - என்ன நடந்தது?

ஐ.பி.எல் மெகா ஏலம் விறுவிறுப்பாக ஏலம் நடந்துக்கொண்டிருந்தபோது ஏல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஹுக் எட்மீட்ஸ் திடீரென சரிந்து விழுந்தது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

திடீரென சரிந்து கீழே விழுந்த ஏலதாரர்... தடைபட்ட IPL மெகா ஏலம் - என்ன நடந்தது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஐ.பி.எல் மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக ஏலம் நடந்துக்கொண்டிருந்த போது ஏல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஹுக் எட்மீட்ஸ் திடீரென சரிந்து விழுந்தது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

10 அணிகளின் குழுவும் பங்கேற்ற இந்த மெகா ஏல நிகழ்ச்சி இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியிருந்தது. இந்த ஏல நிகழ்ச்சியை ஹுக் எட்மீட்ஸ் என்பவர் ஏலதாரராக இருந்து நடத்துவார் என கூறப்பட்டது. 2018 முதல் கடந்த நான்கு வருடமாக இவரே ஐ.பி.எல் ஏலங்களை நடத்தி வருகிறார். ஏலதாரராக 38 வருட அனுபவம் கொண்டவர். 2500 க்கும் மேற்பட்ட ஏல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

இத்தனை அனுபவமிக்க ஹுக் எட்மீட்ஸ் நடத்திய இந்த ஐ.பி.எல் மெகா ஏலம் முதல் இரண்டு மணி நேரம் சிறப்பாகவே சென்றுக்கொண்டிருந்தது. எட்மீட்ஸும் உற்சாகமேவே நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் இலங்கை வீரரான வனிந்து ஹசரங்காவின் பெயரை அறிவித்து ஏலத்தை தொடங்கினார் எட்மீட்ஸ். பஞ்சாப் அணியும் பெங்களூரு அணியும் மாறி மாறி வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டனர். இந்தப் போட்டி கொஞ்ச நேரம் நீடித்தது. 10 கோடிக்கு மேல் சென்ற பிறகும் இந்த ஏலம் முடிவதாக இல்லை. அப்போதும் பஞ்சாபும் பெங்களூருவும் கடுமையாக முயன்றுக்கொண்டிருந்தனர். அனைவரின் கவனமும் இந்த இரண்டு அணிகளின் குழுக்களின் மீதுமே இருந்தது.

அந்த சமயத்தில் எட்மீட்ஸ் திடிரென மேடையிலிருந்து சரிந்து கீழே விழுந்தார். இதனால் அங்கு கூடியிருந்த அத்தனை அணி நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்தனர். ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டது. ஏல நிகழ்ச்சி கொஞ்ச நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

எட்மீட்ஸின் உடல்நிலை எப்படி இருக்கிறது? அவருக்கு என்ன பாதிப்பு? போன்ற தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், எட்மீட்ஸ் நலமாக இருப்பதாகவும் பயப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை எனவும் சில செய்திகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது.

banner

Related Stories

Related Stories