விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை உயிரிழப்பு.. வீரர்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி!

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.

பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை உயிரிழப்பு.. வீரர்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுன்டராக கொடிகட்டிப் பறந்தவர் சுரேஷ் ரெய்னா. இவரின் அதிரடி ஆட்டத்தை கண்டு முன்னணி வீரர்கள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.

தனது ஆட்டத்தால், தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை 'தல' என செல்லமாக ரசிகர்கள் அன்போடு அழைப்பதுபோல் சுரேஷ் ரெய்னாவையும் 'குட்டிதல' என அன்போடு அழைக்கும் அளவு ரசிகர்கள் மனங்களில் குடிகொண்டுள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக் சந்த் ரெய்னா இன்று காலமானார். இவர் சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவர் தொடர் சிகிச்சையில் இருந்துவந்தார்.

இந்நிலையில் இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இந்த செய்தியைக் கேட்டு சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் வீரர்கள் பலரும் சுரேஷ் ரெய்னாவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சுரேஷ் ரெய்னாவின் தந்தை ஜம்மு காஷ்மீரில் உள்ள ரெய்னாவாரி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். பின்னர் 1990ம் ஆண்டிலிருந்து அங்கிருந்து வெளியேறி முராத்நகருக்கு குடிபெயர்ந்துள்ளார். ரூ.10 ஆயிரம் ஊதியம் பெற்றுக் கொண்டே சுரேஷ் ரெய்னாவின் கிரிக்கெட் கனவை நனவாக்க அரும்பாடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories