விளையாட்டு

“எங்கள் மகள் வாமிகாவின் புகைப்படத்தை யாரும் பகிர வேண்டாம்” : விராட் கோலி வேண்டுகோள்!

எங்கள் மகள் வாமிகாவின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“எங்கள் மகள் வாமிகாவின் புகைப்படத்தை யாரும் பகிர வேண்டாம்” : விராட் கோலி வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை நழுவ விட்டது. இந்தப் போட்டியில், இந்திய வீரர் விராட் கோலி அரைசதம் அடித்ததும் திரும்பி தன்னுடைய கிரிக்கெட் பேட்டை கையில் வைத்து, மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி குழந்தையை தாலாட்டுவது போல் செய்த செயல் அனைவரையும் ஈர்த்தது.

அந்த சமயம் போட்டியை பதிவு செய்த கேமரா ஒன்று விராட் கோலியின் குழந்தையை வீடியோ எடுக்க அந்த வீடியோவானது, சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. கிட்டத்தட்ட குழந்தை பிறந்ததிலிருந்து ஓராண்டுக்கும் மேலாக தங்கள் குழந்தையின் முகத்தை சமூக வலைதளங்கள் மூலமாக யாருக்கும் வெளிப்படுத்த வேண்டாம் என்று இந்த தம்பதியினர் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற அனிச்சையான செயலால் இவர்கள் மகள் வாமிகாவின் முகம் சமூக வலைதளத்தில் பதிவாகி வைரலானது.

பல்வேறு ஊடகங்களும், ரசிகர்களும் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிகழ்வு திடீரென நடந்த நிலையில் சமூக வலைதளங்கள் முழுவதும் வாமிகாவின் புகைப்படத்தை ஏராளமானோர் பகிரத் தொடங்கினர்.

“எங்கள் மகள் வாமிகாவின் புகைப்படத்தை யாரும் பகிர வேண்டாம்” : விராட் கோலி வேண்டுகோள்!
“எங்கள் மகள் வாமிகாவின் புகைப்படத்தை யாரும் பகிர வேண்டாம்” : விராட் கோலி வேண்டுகோள்!

இந்நிலையில் சமூக வலைதளத்தில் தங்களின் மகள் வாமிகாவின் புகைப்படத்தில் பகிர வேண்டாம் என விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “வாமிகாவின் புகைப்படம் எங்களுக்கு தெரியாமலேயே வெளியாகி அதிகமாக ஷேர் ஆகி உள்ளது. நாங்கள் முன்பு அறிவித்தது போல வாமிகாவின் முகத்தை வெளியே தெரியாமல் பார்த்து வருகிறோம், இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் வாமிகாவின் புகைப்படத்தை பகிராமல் இருந்திருந்தால் நன்றி!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories