விளையாட்டு

விறுவிறுப்பான ஆட்டம்.. பாகிஸ்தானை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய ஹாக்கி அணி!

பாகிஸ்தானின் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய கோல் கீப்பர் சுராஜ் சிறப்பாக தடுக்கவே பாகிஸ்தான் அணியால் மேற்கொண்டு கோல்களை அடிக்க முடியவில்லை.

விறுவிறுப்பான ஆட்டம்.. பாகிஸ்தானை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய ஹாக்கி அணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட 5 நாடுகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் நேற்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியிருந்தன. பரபரப்பான இந்தப் போட்டியில் இந்தியா 3-1 என வென்றுள்ளது.

இந்தியா Vs பாகிஸ்தான் மோதினால் கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டாக இருந்தாலுமே அது பரபரப்பான மோதலாகவே இருக்கும். ஹாக்கியிலும் அப்படியே. கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய சாம்பின்ஷிப் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளே இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தன. ஆனால், மோசமான வானிலை காரணமாக அந்தப் போட்டி நடைபெறாமல் போக இந்தியா, பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே கோப்பையை பகிர்ந்து கொண்டது.

இதுவரை 5 முறை நடந்து முடிந்துள்ள ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு முறை இந்தியாவும் இரண்டு முறை பாகிஸ்தானும் ஒரு முறை இரண்டு அணிகளும் சேர்ந்தும் கோப்பையை வென்றிருக்கின்றன.

இந்த தொடரில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் கொரியாவிற்கு எதிரான போட்டியை 2-2 என போட்டியை டிராவும், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியை 9-0 என வென்றிருக்கவும் செய்தது. பாகிஸ்தானை பொறுத்தவரைக்கும் முதல் போட்டியை டிரா ஆக்கியிருந்தது. இரண்டு அணிகளுமே தொடரில் நிலைக்க இந்த போட்டியை வெல்ல வேண்டிய நிலையில் களமிறங்கியது.

தொடக்கத்திலிருந்தே இந்திய வீரர்கள் கடுமையாக அட்டாக் செய்ய தொடங்கினர். இதன் பலனாக எட்டாவது நிமிடத்திலேயே ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை இந்திய வீரரான ஹர்மன்ப்ரீத் வெற்றிகரமாக கோலாக்கினார். இந்தியா 1-0 என முன்னிலையை பெற்றது. இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக மூர்க்கமாக அட்டாக் செய்து கொண்டிருந்தனர். ஆனால், மேலும் கோல் அடிப்பதற்கான வாய்ப்பு மட்டும் உருவாகவில்லை. முதல் கால் பகுதி நேரம் முடிகையில் இந்தியா 1-0 என்ற நிலையில் முன்னிலையில் இருந்தது.

விறுவிறுப்பான ஆட்டம்.. பாகிஸ்தானை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய ஹாக்கி அணி!

ஹாக்கியில் 1 கோல் வித்தியாசமெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. ஒரு பெனால்டி கார்னரில் எதிரணி மேலேறி வந்து ஆட்டத்தையே மாற்றிவிடும் என்பதால் இரண்டாம் பாதியிலும் இந்திய வீரர்கள் வேகமாக அட்டாக் செய்தனர். 28வது நிமிடத்தில் தில்ப்ரீத் சிங்கிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை அவர் ஒயிடாக அடித்து வீணாக்கினார். இரண்டாம் கால் பகுதி நேர முடிவிலும் 1-0 என்றே போட்டி தொடர்ந்தது.

மூன்றாவது கால் பகுதி நேரத்திலேயே இந்தியாவின் கோல் தேடுதலுக்கு விடை கிடைத்தது. 42 வது நிமிடத்தில் ஆகாஷ் தீப் சிங் ஒரு கோலை அடித்து இந்தியாவை 2-0 என்ற நிலைக்கு முன் நகர்த்தினார். ஆனால், அடுத்த ஒன்றிரண்டு நிமிடங்களிலேயே ஒரு கோலை அடித்து பாகிஸ்தானும் 2-1 என போட்டியளித்தது.

பரபரப்பான கடைசி கால் பகுதி நேரம் தொடங்கியது. இரண்டு அணிகளுக்குமே இந்த கால்பகுதி நேரத்தில் பெனால்டி வாய்ப்புகள் கிடைத்திருந்தாலும் இந்தியா மட்டுமே அதை கோலாக மாற்றியிருந்தது. இந்திய வீரரான ஹர்மன்ப்ரீத் சிங் ஒரு பெனால்டியை வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது 2 வது கோலை அடித்தார்.

இதன்மூலம் இந்தியா 3-1 என முன்னிலை பெற்றார். பாகிஸ்தானின் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய கோல் கீப்பர் சுராஜ் சிறப்பாக தடுக்கவே பாகிஸ்தான் அணியால் மேற்கொண்டு கோல்களை அடிக்க முடியவில்லை. ஆட்டம் முடிந்தது. 3-1 என பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி போட்டியை வென்றது.

இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலிலும் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories