விளையாட்டு

ரூ.100 கோடி நஷ்ட ஈடுகேட்ட தோனி; IPS அதிகாரியின் மனு தள்ளுபடி - ஐகோர்ட் ஆணையின் விவரம்!

தனக்கு எதிராக 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ரூ.100 கோடி நஷ்ட ஈடுகேட்ட தோனி; IPS அதிகாரியின் மனு தள்ளுபடி - ஐகோர்ட் ஆணையின் விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில், தனியார் தொலைக்காட்சி (ஜீ தொலைகாட்சி) நடத்திய விவாத நிகழ்ச்சி தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு

ஜீ தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ஆம் அண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தோனியின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, இந்த வழக்கில், தற்போது சாட்சி விசாரனை தொடங்கியுள்ள நிலையில் இந்த மனுவை ஏற்றுக் கொண்டால் பிரதான வழக்கு முடிவுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என கூறி சம்பத்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சாட்சி விசாரணை எதிர் கொள்ள வேண்டும் என சம்பத் குமாருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories