தமிழ்நாடு

ரூ.12 லட்சத்தை பெற்று சொந்த அத்தைக்கு கொலை மிரட்டல்: பாஜக பெண் நிர்வாகி மீது மூதாட்டி கண்ணீர் மல்க புகார்

சீட்டு கட்ட சொல்லி ரூ.12,000,00 பணத்தை அபேஸ் செய்து கொலை மிரட்டல் விடுத்த பாஜக பெண் ஒன்றிய செயளாலர் மற்றும் அவரது கணவர் மீது மூதாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

ரூ.12 லட்சத்தை பெற்று சொந்த அத்தைக்கு கொலை மிரட்டல்: பாஜக பெண் நிர்வாகி மீது மூதாட்டி கண்ணீர் மல்க புகார்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் நாகபூஷனம் (72). இவர் தனது நிலத்தை விற்று பணம் பெற்றுள்ளார்.

இதனை அறிந்த அவரது அண்ணன் மகள் வாணியன்சத்திரத்தை சேர்ந்த எல்லாபுரம் ஒன்றியத்தின் பா.ஜ.க செயலாளர் லலிதா என்பவர் தாங்கள் மாத ஏலச்சீட்டு நடத்தி வருவதாகவும் அதில் சேரும் படி நாகபூஷனத்தை வற்புறுத்தியுள்ளார்.

அவரும் அண்ணன் மகள்தானே என்று சீட்டு கட்டியதும் 2 முறை கட்டிய சீட்டுக்கான பணத்தை முறையாக திருப்பி கொடுத்துள்ளார் லலிதா. அதனைத் தொடர்ந்து தனக்கு கடனாக வேண்டும் என்று 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கேட்டு வாங்கியுள்ளார் லலிதா.

ரூ.12 லட்சத்தை பெற்று சொந்த அத்தைக்கு கொலை மிரட்டல்: பாஜக பெண் நிர்வாகி மீது மூதாட்டி கண்ணீர் மல்க புகார்

அந்த பணத்துடன் 3வதாக கட்டிய சீட்டுப்பணம் 7 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 11 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி தராமல் லலிதா ஏமாற்றியுள்ளார். பணத்தை பல முறை நாகபூஷ்ணம் அம்மாள் சென்று கேட்டும், தான் பிஜேபி என்றும் எங்கள் கட்சிதான் ஆட்சியில் உள்ளது என்றும் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று மிரட்டியுள்ளனர்.

லலிதாவையும் அவரது கணவரையும் லாரி ஏற்றி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட நாகபூஷணம் தன் நிலத்தை அரசு எடுத்ததால் எனக்கு வந்த பணத்தை ஏமாற்றியு வாங்கிக் கொண்டதாகவும், அதனை மீட்டு தரும்படியும், தனக்கு தக்க பாதுகாப்பு வழங்கும் படியும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார் நாகபூஷணம்.

banner

Related Stories

Related Stories