விளையாட்டு

இந்திய வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றிக்கறி சாப்பிடக்கூடாது : சர்ச்சையைக் கிளப்பும் BCCI உத்தரவு!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி ஆகியவற்றை சாப்பிடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது பிசிசிஐ.

இந்திய வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றிக்கறி சாப்பிடக்கூடாது : சர்ச்சையைக் கிளப்பும் BCCI உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்தியாவில் நடந்த டி20 தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது.

இந்நிலையில், இந்திய வீரர்களின் ஃபிட்னெஸை பராமரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், இந்திய வீரர்களுக்கு புதிய உணவு கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது பி.சி.சி.ஐ.

அதன்படி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. ஹலால் அசைவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

எனவே இனிமேல் அசைவ உணவுகளை சாப்பிட விரும்பும் கிரிக்கெட் வீரர்கள் அனைத்துவிதமான அசைவ உணவுகளையும் சாப்பிடமுடியாது. ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று பி.சி.சி.ஐ கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தனிநபர் உணவு சுதந்திரத்தில் தலையிட BCCIக்கு உரிமை இல்லை என சமூக வலைதளங்களில் பி.சி.சி.ஐ-யின் நடவடிக்கைக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் நடந்துவருகிறது.

banner

Related Stories

Related Stories