விளையாட்டு

சாம்பியன் CSK அணிக்கு பிரமாண்ட பாராட்டு விழா தொடங்கியது... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

சாம்பியன் CSK அணிக்கு பிரமாண்ட பாராட்டு விழா தொடங்கியது... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்டமாக இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்வு தற்போது தொடங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 4வது முறையாக கோப்பையை வென்றதற்காக மிகப் பிரம்மாண்டமாக வெற்றி விழா நடத்தப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்தது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கான பாராட்டு விழா பிரம்மாண்டமாக இன்று நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னை வந்தடைந்தார். சென்னை அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பாராட்டு விழாவில், சென்னை அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய தோனிக்கு சிறப்பு கௌரவம் அளிக்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பாராட்டு விழாவை, கலைஞர் செய்திகள் Youtube மற்றும் Facebook பக்கங்களில் நேரலையில் காணலாம்!

banner

Related Stories

Related Stories