விளையாட்டு

”காதல் கிரிக்கெட்டு விழுந்துருச்சு விக்கெட்டு” -போட்டி முடிந்ததும் மோதிரம் மாற்றிய CSK வீரர்: Viral Video

”காதல் கிரிக்கெட்டு விழுந்துருச்சு விக்கெட்டு” -போட்டி முடிந்ததும் மோதிரம் மாற்றிய CSK வீரர்: Viral Video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

14வது சீசனுக்கான ஐபிஎல்-ன் இரண்டாவது பாதி போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று (அக்.,07) சென்னை அணிக்கான நடப்பு சீசனின் கடைசி போட்டியாக இருந்தது.

ப்ளே ஆஃப் போட்டிக்கு தகுதியானப் பிறகு நடைபெற்ற எந்த போட்டிகளிலும் சி.எஸ்.கே. வெற்றி பெறாததால் ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றிருந்தாலும் போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் ஆல் ரவுண்டரான தீபக் சாஹர் செய்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

என்னவெனில், தனது நீண்ட நாள் தோழியிடம் கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் காதலை வெளிப்படுத்தி மோதிரத்தை பரிசளித்த வீடியோதான் இணையத்தின் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது.

இதனையடுத்து பலரது வாழ்த்துகளையும் தீபக் சாஹர் பெற்று வருகிறார். மேலும், சென்னை அணி, ஐபிஎல் ட்விட்டர் பக்கங்களிலும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் தீபக் சாஹருக்கும் அவரது காதலிக்கும் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories