விளையாட்டு

ஜேசன் ராய், வில்லியம்சன் ஆட்டத்தால் ஆறுதல் வெற்றிப்பெற்ற சன்ரைசர்ஸ்.. ராஜஸ்தான் அணி எப்படி தோற்றது?

சன்ரைசர்ஸ் நேற்றுதான் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற ஜென் நிலையில் களமிறங்கி ராஜஸ்தானை காலி செய்துள்ளது.

ஜேசன் ராய், வில்லியம்சன் ஆட்டத்தால் ஆறுதல் வெற்றிப்பெற்ற சன்ரைசர்ஸ்.. ராஜஸ்தான் அணி எப்படி தோற்றது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்துவிட்ட சன்ரைசர்ஸும் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்புக்காக போராடி கொண்டிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேற்று நேருக்கு நேர் மோதின. இவ்வளவு நாளும் அழுத்தத்தோடு களமிறங்கிய சன்ரைசர்ஸ் நேற்றுதான் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற ஜென் நிலையில் களமிறங்கி ராஜஸ்தானை காலி செய்துள்ளது.

ராஜஸ்தான் அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. அதிரடி ஓப்பனரான எவின் லீவிஸ் ப்ளேயிங் லெவனுக்குள் மீண்டும் வந்திருந்தார். இளம் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகிக்கு காயம் காரணமாக ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

சன்ரைசர்ஸ் அணியில் அந்த அணியின் முக்கிய வீரரான டேவிட் வார்னருக்கே ஓய்வளிக்கப்பட்டிருந்தது. அவருக்கு பதில் ஜேசன் ராய் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இது சன்ரைசர்ஸ் ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையுமே வருந்த செய்தது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எவின் லீவிஸ் 6 ரன்களிலேயே புவனேஷ்வர்குமார் பந்தில் வெளியேறினார். இன்னொரு ஓப்பனரான ஜெய்ஸ்வால் கொஞ்சம் நின்று அதிரடியாகவும் ஆடினார். கேப்டன் சஞ்சு சாம்சனும் இவருடன் நல்ல பார்ட்னர்ஷிப் போட்டிருந்தார். சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் பல கேட்ச்சுகளையும் தவறவிட்டிருந்தனர். அப்படியிருந்தும் ஜெய்ஸ்வாலால் பெரிய இன்னிங்ஸை ஆட முடியவில்லை. 36 ரன்களில் சந்தீப் சர்மா பந்தில் போல்ட் ஆகியிருந்தார். இங்கிலாந்து வீரரான லிவிங்ஸ்டனும் 4 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றியிருந்தார்.

ஜேசன் ராய், வில்லியம்சன் ஆட்டத்தால் ஆறுதல் வெற்றிப்பெற்ற சன்ரைசர்ஸ்.. ராஜஸ்தான் அணி எப்படி தோற்றது?

இதன்பிறகு, முழுக்க முழுக்க கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டுமே களத்தில் நின்று ரன்ரேட்டை உயர்த்தினார். இவருக்கு கொஞ்சம் உறுதுணையாக இளம் வீரர் லாம்ரோர் 29 ரன்களை எடுத்து கொடுத்தார். சிறப்பாக ஆடிய சாம்சன் 57 பந்துகளில் 82 ரன்களை எடுத்து கடைசி ஓவரில் சித்தார்த் கௌல் பந்தில் அவுட் ஆனார். கேப்டன் சாம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் 164 ஆக உயர்ந்தது.

சன்ரைசர்ஸுக்கு டார்கெட் 165. கடந்த போட்டியில் 126 ரன்களை கூட எடுக்க முடியாமல் தோல்வியை தழுவியிருந்ததால் சன்ரைசர்ஸ் கொஞ்சம் பதற்றத்துடனேயே களமிறங்கியது. ஆனால், டேவிட் வார்னருக்கு பதிலாக களமிறங்கியிருந்த ஜேசன் ராய் அட்டகாசமாக ஆடி கொடுத்தார். விருத்திமான் சஹா சீக்கிரமே அவுட் ஆகியிருந்தாலும் ஜேசன் ராயும் வில்லியம்சனும் பொறுப்பாக நின்று ஆடினர். ஜேசன் ராய் அரைசதத்தை கடந்து 42 பந்துகளில் 60 ரன்களை எடுத்து கொடுத்தார்.

அவர் அவுட் ஆன பிறகு, கேப்டன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் ரன்ரேட் அழுத்தத்தை அதிகரிக்க செய்யாமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஆடினர். ஏதுவான பந்துகளில் மட்டும் பவுண்டரிக்களை அடித்திருந்தனர். இதனால் 19 வது ஓவரிலேயே சன்ரைசர்ஸ் அணி இலக்கை எட்டியது. வில்லியம்சன் 51 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தார். ஏறக்குறைய ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் சன்ரைசர்ஸ் அணி இப்போது மற்ற அணிகளின் வாய்ப்பில் கபடி ஆடிக்கொண்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories