விளையாட்டு

நடராஜனுக்கு கொரோனா; தனிமைப்படுத்தப்பட்ட 6 பேர்; திட்டமிட்டபடி இன்றைய போட்டி நடக்குமா? DC vs SRH

ஐதராபாத் அணியைச் சேர்ந்த நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்து 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நடராஜனுக்கு கொரோனா; தனிமைப்படுத்தப்பட்ட 6 பேர்; திட்டமிட்டபடி இன்றைய போட்டி நடக்குமா? DC vs SRH
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஐபிஎல் போட்டிகளுக்காக வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டுள்ளனர். 14வது சீசனின் முதல் பாதி முடிந்தவுடன் கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் கடந்த ஆண்டை போலவே அமீரகத்தில் நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டு தற்போது போட்டிகளும் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இன்று மாலை 7.30 மணிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் போட்டி துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இப்படி இருக்கையில், யார்க்கர் நாயகனான ஐதராபாத் அணியைச் சேர்ந்த நடராஜனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அணியின் வீரர் விஜய் சங்கர், நிர்வாகி என 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இதனையடுத்து ஐதராபாத் அணியைச் சேர்ந்த இதர வீரர்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்ததில் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. இருப்பினும் இன்றைய போட்டி நடைபெறுமா என்ற ஐயப்பாடு ஐபிஎல் ரசிகர்களிடையே மேலோங்கியுள்ளது. இந்நிலையில், திட்டமிட்டபடி டெல்லி - ஐதராபாத்துடனான லீக் போட்டி இன்று நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories