விளையாட்டு

இறுதிப்போட்டியில் ரவிகுமார் தாஹியா... மல்யுத்தத்தில் தங்கம் வென்று புது வரலாறு படைக்குமா இந்தியா?

அரையிறுதியில் வென்று வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார் ரவிகுமார் தாஹியா.

இறுதிப்போட்டியில் ரவிகுமார் தாஹியா... மல்யுத்தத்தில் தங்கம் வென்று புது வரலாறு படைக்குமா இந்தியா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டோக்கியோ ஒலிம்பிக்கில் மீராபாய் சானு, சிந்து ஆகியோரின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து இந்திய வீரர்கள் தோல்வியை தழுவியது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இந்நிலையில் ஒலிம்பிக்கின் 11வது நாளான இன்று ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்குச் சென்றது, மல்யுத்தத்தில் ரவிகுமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தது இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் ஆடவர் 57 கிலோ உடல் எடை ஃப்ரீஸ்டைல் பிரிவில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவை இந்திய வீரர் ரவிகுமார் தாஹியா எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கத்திலேயே இவர் 2-1 என முன்னிலை பெற்றார்.

ஆனால், கஜகஸ்தான் வீரர் உடனே பதிலடி எடுத்து 9-1 என்ற புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்றார். பிறகு உடனே சுதாரித்துக் கொண்ட ரவி தாஹியா அடுத்தடுத்து சுற்றில் 5-9,7-9 புள்ளிகள் பெற்று கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இறுதிப்போட்டியில் ரவிகுமார் தாஹியா... மல்யுத்தத்தில் தங்கம் வென்று புது வரலாறு படைக்குமா இந்தியா?

இவரின் இந்த வெற்றியைத் தொடர்ந்து மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். மேலும் இறுதிப் போட்டியில் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பும் ரவி தாஹியாவுக்கு உள்ளது.

அதேபோல் மற்றொரு மல்யுத்த அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா, அமெரிக்காவின் டேவிட் டெய்லரிடம் 0-10 என கணக்கில் தோல்வியடைந்தார். இருப்பினும் அரையிறுதிப் போட்டியில் தோற்றதால் இவர் வெண்கலப்பதக்கத்திற்கான சுற்றில் விளையாடுகிறார். இதனால் இவர் வெண்கலப் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

மல்யுத்தத்தில் 4வது முறையாகத் தொடர்ச்சியாக ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்வது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரவிகுமார் தாஹியா தங்கம் வென்றால் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றையும் படைப்பார்.

banner

Related Stories

Related Stories