விளையாட்டு

SRH vs DC சூப்பர் ஓவர் பதற்றம்: வார்னரின் தவறான முடிவால் த்ரில் வெற்றிபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்! IPL2021

டெல்லியும் சன்ரைசர்ஸும் மோதிய இந்த ஆட்டம் சூப்பர் வரை சென்றது. சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் டெல்லி அணி த்ரில் வெற்றிபெற்றது.

SRH vs DC சூப்பர் ஓவர் பதற்றம்: வார்னரின் தவறான முடிவால் த்ரில் வெற்றிபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்! IPL2021
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டாஸை வென்றார். சேப்பாக்கத்தில் சேஸிங் செய்வது கடினம் என்பதால் ரிஷப் பண்ட் பேட்டிங்கே தேர்வு செய்தார்.

டெல்லி அணியின் சார்பில் தவானும் ப்ரித்திவி ஷாவும் ஓப்பனர்களாக களமிறங்கினர். இன்னிங்ஸின் தொடக்கமே அதிரடியாக இருந்தது. கலீல் அஹமது வீசிய முதல் மூன்று பந்துகளையும் பவுண்டரியாக்கினார் ப்ரித்திவி ஷா. இதன்பிறகு, சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை உணர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்த கூட்டணி.

ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துகொண்டே ஏதுவான பந்துகளை மட்டுமே பவுண்டரிக்கு விரட்டுவது இவர்களின் ப்ளானாக இருந்தது. திட்டமிட்ட ஆட்டத்தால் பவர்ப்ளே 6 ஓவர்களில் 51 ரன்களை சேர்த்தது டெல்லி அணி. பொறுப்பாக ஆடிய இந்த கூட்டணி 10 ஓவர்களில் 81 ரன்களை சேர்த்தது.

சன்ரைசர்ஸின் நம்பிக்கை நட்சத்திரமான ரஷித்கானே இந்த கூட்டணியை பிரித்தார். 11 வது ஓவரில் ரஷித்கான் வீசிய பந்தை இறங்கி வந்து ஆட முயன்ற தவான் ஸ்டம்பை பறிகொடுத்தார். தவான் 28 ரன்களில் பெவிலியனுக்கு நடையைக்கட்டினார். அரைசதம் கடந்திருந்த ப்ரித்திவி ஷா வும் சுஜித் வீசிய அடுத்த ஓவரிலேயே ரன் அவுட் ஆனார்.

SRH vs DC சூப்பர் ஓவர் பதற்றம்: வார்னரின் தவறான முடிவால் த்ரில் வெற்றிபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்! IPL2021

இதன்பிறகு, டெல்லி அணியின் ரன்ரேட் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. ஸ்டீவ் ஸ்மித் 100 ஸ்ட்ரைக் ரேட்டில் தொடர்ந்து உருட்ட, இன்னொரு பக்கம் ரிஷப் பண்ட் ரன்ரேட்டை அதிகரிக்க பேட்டை வீசிக்கொண்டிருந்தார். 4 பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும் அடித்த பண்ட் 37 ரன்களில் 19 வது ஓவரில் அவுட் ஆனார். கடைசி ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு பவுண்டரி மற்றும் சிக்சரை அடிக்க, 159 ரன்களை எட்டியது டெல்லி அணி.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது. சேப்பாக்கம் பிட்ச்சில் 160 ரன்களே பெரிய ஸ்கோர்தான். இதனால் பவர்ப்ளேயில் முடிந்தளவுக்கு ரன்களை அதிகமாக அடிக்க சன்ரைசர்ஸ் முடிவ்ய் செய்தது. பேர்ஸ்ட்டோ நாலாபுறமும் பந்துகளை சிதறடித்து அசத்தினார்.

ஸ்டாய்னிஸ், அக்சர், அஷ்வின், ஆவேஷ் கான் அத்தனை பேரின் பந்திலும் சிக்சர்களை பறக்கவிட்டார் பேர்ஸ்ட்டோ. இடையே வார்னரும் ரன் அவுட் ஆகியிருந்தார். நம்பர் 3 இல் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பேர்ஸ்ட்டோ 38 ரன்களில் தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதன்பிறகு, மொத்தமாக கேன் வில்லியம்சனை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் வலுவாக நின்றார் வில்லியம்சன். இந்திய பேட்ஸ்மேன்கள் கூட திணறிய சேப்பாக்கம் பிட்ச்சில் வில்லியம்சன் தனது உலகத்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

SRH vs DC சூப்பர் ஓவர் பதற்றம்: வார்னரின் தவறான முடிவால் த்ரில் வெற்றிபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்! IPL2021

பல இந்திய பேட்ஸ்மேன்களை விட ஸ்பின்னை நேர்த்தியாக எதிர்கொண்டார். விக்கெட்டையும் விடாமல் ரன்ரேட்டையும் கையை மீறி போகாமல் வைத்து நன்றாக ஆடினார் வில்லியம்சன். இடையில் விராட் சிங், ரஷீத் கான், விஜய் சங்கர் ஆகியோர் வந்த வேகத்திலேயே வெளியேறியிருந்தனர்.

கடைசி 2 ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அரைசதத்தை கடந்த வில்லியம்சன்தான் சேஸை முடிக்கப்போகிறார் என நினைக்கையில், ஆச்சர்யமாக சுஜித் எனும் இளம் வீரர் பிரமாதப்படுத்தினார். ஆவேஷ் கான் வீசிய 19 வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த சுஜித், ரபாடா வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சரையும் பறக்கவிட்டார்.

இளம் வீரரை நம்பி ஸ்ட்ரைக்கை கொடுத்ததற்காக வில்லியம்சனை பாராட்டலாம். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டதால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில்தான் வார்னர் மிகப்பெரிய தவறை செய்தார். நல்ல ஃபார்மில் இருந்த பேர்ஸ்ட்டோவை வில்லியம்சனோ டு இறக்குவதற்கு பதில் அவரே இறங்கினார்.

இது தவறான முடிவாக அமைந்தது. சூப்பர் ஓவரில் வில்லியம்சன் மட்டுமே ஒரு பவுண்டரி அடித்தார். வார்னரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால், சன்ரைசர்ஸால் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த 8 ரன்கள் டார்கெட்டை டெல்லி அணியும் தடுமாறி கடைசி பந்திலேயே எடுத்தது.

சன்ரைசர்ஸ் பேட்டிங்கின் போது சூப்பர் ஓவரில் ஒரு ரன் ஷார்ட் ரன்னாக அறிவிக்கப்பட்டது. வார்னர் க்ரீஸுக்குள் பேட்டை வைக்காமல் ஓடியதால் நடுவர் ஒரு ரன்னை குறைத்தார். அந்த ஒரு ரன் இருந்திருந்தால் கூட ஆட்டம் மாறியிருக்கும். கேப்டன் வார்னர் செய்த சிறு தவறுகளால் வெற்றிபெற வேண்டிய போட்டியை தோற்றிருக்கிறது சன்ரைசர்ஸ்.

banner

Related Stories

Related Stories