விளையாட்டு

SydneyTest: “நாம ஜெயிச்சுட்டோமா.. ஓவரா ஓட்டுற..” - அஸ்வின் நிலை குறித்து பகிர்ந்த மனைவி ப்ரீத்தி!

வெற்றி பெறுவதன் அவர்களின் அவசியம், எனக்குக் கொஞ்சம் பழகிவிட்டது. ஆனால், அதை முழுமையாகப் புரிந்துகொள்ள இன்னும் அதிக காலம் எடுத்துக்கொள்ளும் என்று நினைக்கிறேன் என ப்ரீத்தி அஸ்வின் கூறியுள்ளார்.

SydneyTest: “நாம ஜெயிச்சுட்டோமா.. ஓவரா ஓட்டுற..” - அஸ்வின் நிலை குறித்து பகிர்ந்த மனைவி ப்ரீத்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

சிட்னி டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் Ashwin எந்த அளவுக்கு வலியால் துடித்தார் என்பதையும், ஐந்தாவது நாள் ஆட்டத்திற்கு முன்பு அவர் எப்படி கஷ்டப்பட்டார் என்பதையும் Indian Express ஆங்கில நாளிதழுக்கு பகிர்ந்திருக்கிறார் அஷ்வினின் மனைவி பிரீத்தி. தன் தந்தை வலியில் துடிப்பதைப் பார்த்து தன் 4 வயது மகள் "லீவ் போட்டிடுங்கப்பா" என்று கூறியதாகக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,

"நான்காவது நாள் ஆட்டத்தை டி.வி-யில் பார்த்தபோதே அவருக்கு பிரச்னை இருக்கிறது என்பதை உணர்ந்தேன். பந்து வீசும்போதே அவரது முதுகில் வலி இருந்திருக்கிறது. அவர் ரூமுக்கு வந்ததும் 'எப்படி இருக்கிறது' என்று கேட்க, 'நான் பௌலிங் போட்டதைத்தான் பாத்தியே' என்று வலியோடுதான் சொன்னார். அன்று காலை வார்ம் அப்பின் போது கால் இடறி அவரது முதுகில் வலி ஏற்பட்டதாகவும் கூறினார். கொஞ்சம் கொஞ்சமாக வலி அதிகமாக, ஃபிசியோவைப் பார்க்கச் சென்றிருக்கிறார்.

ஆட்டம் இன்னும் சமநிலையில் சென்றுக் கொண்டிருக்கையில், எனக்குக் கவலை அதிகமானது. குடும்ப உறுப்பினர்களாக, எங்களுடைய உணர்வுகள் வேறு மாதிரிதான் இருக்கும். அவர்கள் அருகில் இருந்து அந்த எமோஷன்களை, வலிகளை அனுபவத்திருக்கும், அதற்கு மத்தியில் வெற்றி பெறுவதன் அவர்களின் அவசியம், எனக்குக் கொஞ்சம் பழகிவிட்டது. ஆனால், அதை முழுமையாகப் புரிந்துகொள்ள இன்னும் அதிக காலம் எடுத்துக்கொள்ளும் என்று நினைக்கிறேன்.

ஐந்தாவது நாள் காலை, அவர் வலி பலமடங்கு அதிகரித்திருந்தது. ஃபிசியோ ரூமுக்குத் தவழ்ந்து சென்றதாகக் கூறினார். நல்லவேளை அவரது அறை பக்கத்திலேயே இருந்தது. அவரால் குனியவோ, நிமிரவோ, உட்கார்ந்தால் எழுந்திருக்கவோ முடியவில்லை. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 'எப்படி பேட்டிங் செய்யப்போகிறீர்கள்' என்று கேட்டேன். 'எனக்குத் தெரியவில்லை. ஆனால், சமாளித்துவிடுவேன். என்னை கிரவுண்டுக்கு மட்டும் அழைத்துச் சென்றுவிடுங்கள்' என்று கூறினார். அவரை மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக யாராவது ஃபோன் செய்துவிட மாட்டார்களா என்று சில மணி நேரம் காத்துக்கொண்டிருந்தேன்.

SydneyTest: “நாம ஜெயிச்சுட்டோமா.. ஓவரா ஓட்டுற..” - அஸ்வின் நிலை குறித்து பகிர்ந்த மனைவி ப்ரீத்தி!

அவர் காலை வலியால் துடித்துக்கொண்டிருந்தபோதுதான், 'லீவ் போட்டிடுங்க அப்பா' என்று மகள் ஆத்யா கூறினாள். வலியோடு ஆபீஸ் செல்வதற்கு பதிலாக வீட்டில் ரெஸ்ட் எடுக்கலாம் என்று அவள் நினைத்திருக்கலாம். நானும் கூட 'பேசாம பசங்க மாதிரி, ஸ்நேக் பிரேக் கேட்டிட்டு ரெண்டு மணி நேரத்துல வந்திடுங்க' என்று விளையாட்டாகக் கூறினேன். 'ஓவரா ஓட்டுற' என்று சிரித்தார். அதுவரை அந்த நாள் மிகவும் கடினமாக இருந்தது. அவரை டென்ஷனாக, வலியோடு இதற்கு முன் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படியொரு சூழ்நிலையில் பார்த்ததேயில்லை.

பயோ பபிள் பிரச்னைகளால் அன்று நான் மைதானத்துக்குச் செல்லவில்லை. டி.வி-யில் அவர் கிட் அணிந்து நின்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். உட்கார்ந்தால் எந்திரிக்க முடியாது என்பதால் அவர் நின்றுகொண்டே இருக்கிறார் என்பது புரிந்தது. பெய்ன் கில்லர் இன்னும் வேலை செய்யவில்லையே என்று மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். இடையில் குழந்தைகளுக்கு உணவு, அவர்களைப் பார்த்துக்கொள்வது என அதையும் பார்க்கவேண்டியதாக இருந்தது. அதற்கு நடுவே, அவர் பேட்டோடு களமிறங்கியபோத, 'எப்படித்தான் இவர்களால் இதைச் செய்ய முடிகிறது. அவர்களுக்கு மட்டுமே புரியும்' என்று நினைத்துக்கொண்டேன்.

அவர் 25-30 ரன் எடுப்பதுவரை நான் பார்க்கவில்லை. அவ்வப்போது ஆன்லைனில் ஸ்கோர் மட்டும்தான் பார்த்தேன். ஒருகட்டத்தில் என் அம்மா போன் செய்தார், 'அம்மா, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டம் நடந்துக்கொண்டிருக்கிறது. இப்போது பேசமுடியாது' என்று கட் செய்துவிட்டேன். இதுபோன்ற தருணங்களில் ட்விட்டர்தான் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும். அதனால் ட்விட்டரில் பதிவிடத் தொடங்கினேன்" என்று குறிப்பிட்டிருக்கும் பிரீத்தி, ஆட்டத்தின் ஒவ்வொரு தருணத்திலும் தன் மனநிலை எப்படி இருந்தது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

"அடுத்த நாள் காலை அவர் அறையில் இருந்ததைப் பார்த்து ஆச்சர்யமடைந்தனர் மகள்கள் இருவரும். 'ஏன்ப்பா விளையாடப் போகல' என்று அகிரா கேட்க, 'நாம ஜெயிச்சிட்டோமா அப்பா' என்று கேட்டாள் ஆத்யா" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories