விளையாட்டு

“எங்கள் ப்ரைவசிக்கு மதிப்பு கொடுப்பீர்கள் என நம்புகிறோம்” - குழந்தை பிறந்த தகவலை வெளியிட்ட விராட் கோலி!

விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை விராட் கோலி உறுதிப்படுத்தியுள்ளார்.

“எங்கள் ப்ரைவசிக்கு மதிப்பு கொடுப்பீர்கள் என நம்புகிறோம்” - குழந்தை பிறந்த தகவலை வெளியிட்ட விராட் கோலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் சென்று விளையாடி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது குழந்தை பிறப்பையொட்டி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இருப்பதற்காக முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்பினார்.

இந்நிலையில், விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை விராட் கோலி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனது மனைவியும், குழந்தையும் நலமுடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள விராட் கோலி, தங்களுடைய வாழ்க்கையில் புதிய பயணம் தொடங்கவிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சமயத்தில் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை மதித்துச் செயல்படுவீர்கள் என நம்புகிறோம் என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விராட் கோலியின் ஆட்டத்தை விமர்சிக்க, அவரது தனிப்பட்ட வாழ்வைப் பற்றிப் பேசுவது பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்பொருட்டே, குழந்தை பிறப்பு குறித்த அறிவிப்போடு இப்படியொரு குறிப்பையும் வெளியிட்டுள்ளார் கோலி.

banner

Related Stories

Related Stories