விளையாட்டு

“ஆஸி தொடரில் இந்திய அணி, ‘RCB 2.O’ போல விளையாடுவது ஏன்?” : கேள்விகுள்ளாகும் கோலியின் கேப்டன்ஷிப்!

இந்திய அணி கடைசியாக விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

“ஆஸி தொடரில் இந்திய அணி, ‘RCB 2.O’ போல விளையாடுவது ஏன்?” : கேள்விகுள்ளாகும் கோலியின் கேப்டன்ஷிப்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை தோற்றிருப்பதன் மூலம் 2-0 என ஆஸியிடம் தொடரை இழந்திருக்கிறது இந்திய அணி. ஊரடங்கிற்குப் பிறகு இந்தியா விளையாடிய முதல் தொடரே தோல்வியில் முடிந்திருக்கிறது. மேலும், இந்திய அணி கடைசியாக விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

எல்லா அணி வீரர்களும், மீடியாக்களும் இந்தியாவை வீழ்த்தவே முடியாத அணி போன்றும் இப்போது இருக்கும் இந்திய அணிதான் மிகச்சிறந்த இந்திய அணி என்றும் பாராட்டுமழையை பொழிந்து வந்தனர். ஆனால், இந்த ஆஸி தொடரை பார்க்கும்போது இந்திய அணி RCB அணியை பார்ப்பது போலவே இருக்கிறது. இங்கே எல்லாமே இருக்கிறது. ஆனால், ரிசல்ட் மட்டும் அணிக்கு சாதகமாக அமையாது. இந்திய அணி RCB 2.O போல விளையாடுவது ஏன்?!

அங்கேயும் கோலிதான் கேப்டன், இங்கேயும் கோலிதான் கேப்டன். இந்த தொடருக்கு முன்பாக ஐ.பி.எல் தொடரில் மும்பை சாம்பியன் ஆனவுடன் ரோஹித்தை இந்திய அணியின் ஒயிட் பால் அணிக்கு கேப்டன் ஆக்கலாம் என்ற கருத்து பெருவாரியாக முன் வைக்கப்பட்டது. இந்த சீரிஸை பார்க்கும்போது அந்தக் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளவே தோன்றுகிறது.

“ஆஸி தொடரில் இந்திய அணி, ‘RCB 2.O’ போல விளையாடுவது ஏன்?” : கேள்விகுள்ளாகும் கோலியின் கேப்டன்ஷிப்!

கோலி எப்போதுமே எதிரணிக்கு மொத்தமாக திட்டங்கள் தீட்டுவதை விட அந்த அணியின் கீ-ப்ளேயர்களுக்கு திட்டம் தீட்டுவதில்தான் முழு கவனத்தையும் செலுத்துவார். அந்த கீ-ப்ளேயர்களை தூக்கிவிட்டால் எதிரணி மொத்தமாக சொதப்பிவிடும் என்பது அவரது எண்ணம். இதை ஐ.பி.எல் தொடரில் பஞ்சாபுக்கு எதிராக கெயிலை வீழ்த்துவதற்கு மட்டும் அவர் வகுத்த யூகங்கள் மூலம் புரிந்துகொள்ள முடியும். இவர் கெய்லுக்கு திட்டம் வகுக்க, இன்னொரு பக்கம் மயங்கும் ராகுலும் நின்று ஆட்டத்தை முடித்துவிட்டார்கள். அவர்களை கட்டுப்படுத்துகிற எண்ணமே கோலியிடம் இல்லை.

அதேபோல, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக மட்டும் மற்ற அணிகளின் டெய்ல் எண்டர்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடிப்பதை பார்த்திருப்போம். ஏனெனில், சில கீ-ப்ளேயர்களின் விக்கெட்டுக்கு மட்டும்தான் கோலி மதிப்பு கொடுப்பார். இந்த டெய்ல் எண்டர் விக்கெட்டுகள் எல்லாம் எப்படியும் சட்டென்று விழுந்துவிடும் என்ற நினைப்பில் அவர்களுக்காக எந்த ப்ளானையும் களத்தில் அந்த நேரத்தில் கூட தீட்டமாட்டார். ஆனால், அந்த டெய்ல் எண்டர்கள் கடைசியில் ஒரு 50-100 பார்ட்னர்ஷிப் போட்டு ஆட்டத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுவார்கள்.

அதுபோலத்தான் இந்த சீரிஸில் வார்னர், லபுஷேன், ஸ்டாய்னிஸ் ஆகியோரை மட்டும்தான் கோலி கீ-ப்ளேயர்களாக மதிக்கிறார். இவர்களுக்கான திட்டங்கள் மட்டும்தான் கோலியின் கையில் இருக்கிறது. ஸ்மித், ஃபின்ச், மேக்ஸ்வெல் போன்றவர்களையெல்லாம் சுலபமாக வீழ்த்திவிடலாம் என்கிற நினைப்பில்தான் மைதானத்துக்குள் அடி எடுத்து வைத்திருப்பார் கோலி. ஆனால், இந்த சீரிஸை இந்தியாவின் கையிலிருந்து பிடுங்கிச் சென்றது கோலி பெரிதாக நினைக்காத அந்த மூன்று வீரர்கள்தான்.

“ஆஸி தொடரில் இந்திய அணி, ‘RCB 2.O’ போல விளையாடுவது ஏன்?” : கேள்விகுள்ளாகும் கோலியின் கேப்டன்ஷிப்!

ஸ்மித் இரண்டு சதம், ஃபின்ச் ஒரு சதம், மேக்ஸ்வெல் இரண்டு அதிரடி இன்னிங்ஸ்..இவர்கள் பேட் செய்துவிட்டு பெவிலியனுக்கு செல்லும்போதே இந்திய அணி தோற்றுவிட்டது. இந்தியாவின் பேட்டிங் எல்லாம் வெறும் சம்பிரதாயம்தான்.

முதல் போட்டியில் வார்னர்-ஃபின்ச்சிடம் அடிபட்ட பிறகு நமது பௌலர்களே அவர்களை கட்டுப்படுத்த கொஞ்சம் ஐடியாவோடு வந்திருந்தனர். முதல் ஓவரிலேயே ஷமி வார்னருக்கு ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஆங்கிள் கிரியேட் செய்து இன்கம்மிங் டெலிவரிக்களாக வீசிக்கொண்டிருந்தார்.

இந்த ஓவரில் வார்னரால் ஒரு பவுண்ட்ரி மட்டுமே அடிக்க முடிந்தது. மற்ற 5 பந்துகளும் டாட் தான். அடுத்து பும்ரா ஓவர். ஃபின்ச்சுக்கும் இப்படி இன்கமிங் டெலிவரிக்களாக வர, ஷாட் ஆட ரூம் கிடைக்காமல் அந்த ஓவர் மெய்டன். ஷமியும் பும்ராவும் சிறப்பாக பந்துவீச்சை தொடங்கியிருந்தனர். பெரும்பாலான பந்துகளை பேட்ஸ்மேன்கள் பேடிலும் தொடையிலும் வாங்கிக் கொண்டிருந்தனர். சில மிஸ் ஹிட்களும் வந்தது. விக்கெட் விழுவதற்கான அத்தனை சாத்தியங்களும் உருவாகியிருந்தது.

“ஆஸி தொடரில் இந்திய அணி, ‘RCB 2.O’ போல விளையாடுவது ஏன்?” : கேள்விகுள்ளாகும் கோலியின் கேப்டன்ஷிப்!

ஆனால், கோலி என்ன யோசித்தாரோ தெரியவில்லை. இரண்டே ஓவரில் பும்ராவின் ஸ்பெல்லை முடிக்க வைத்து சைனியை பந்து வீச அழைத்து வந்தார். ஷமி, பும்ரா இருவரும் பிட்ச்சில் ஒரு ஒத்துழைப்புமே இல்லை என்பதை தெரிந்துதான் ஆங்கிள் இன்கம்மிங் டெலிவரிக்களை வீசிக்கொண்டிருந்தனர்.

சைனி உள்ளே வந்து ஸ்விங்குக்கு முயற்சிக்கிறேன் என்ற பெயரில் என்னென்னவோ முயற்சி செய்ய, எதுவும் எடுபடாமல் வார்னர்-ஃபின்ச் கூட்டணி அழகாக செட்டில் ஆகிவிட்டது. பும்ராவை கட் செய்துவிட்டு சைனி வந்து வீசிய இந்த மூன்று ஓவர்களில் மட்டும் 28 ரன்கள். இன்னொரு எண்ட்டில் ஷமி டைட்டாக வீசியும் ப்ரயோஜனமில்லாமல் போனது. ஷமி-பும்ரா ஓப்பனிங் ஸ்பெல் இன்னும் இரண்டு ஓவர்களுக்கு நீண்டிருந்தால் கூட விக்கெட் கிடைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். கோலி ஏன் இந்த கூட்டணியை முறித்தார் என்பது புரியவில்லை.

முதலில் சொன்னதை போலத்தான், வார்னர்-ஃபின்ச் இருவரும் தடுமாறுகிறார்கள், இவர்கள் எப்படியும் யார் வீசினாலும் தாங்களாகவே அவுட் ஆகிவிடுவார்கள். அதற்கு ஏன் பும்ரா ஓவரை வேஸ்ட் செய்ய வேண்டும்? நாம் பும்ரா ஓவரை அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு சேமித்து வைத்துக்கொள்வோம் என நினைத்திருக்கலாம். ஆனால், அந்த ஓப்பனிங் ஸ்பெல்லை தவிர இந்தியா வேறு எங்கும் பௌலிங்கில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

“ஆஸி தொடரில் இந்திய அணி, ‘RCB 2.O’ போல விளையாடுவது ஏன்?” : கேள்விகுள்ளாகும் கோலியின் கேப்டன்ஷிப்!

இந்திய அணியின் பௌலிங்கில் ஒரு துருப்புச்சீட்டான பும்ராவை கோலியே காலி செய்துவிட, இன்னொரு துருப்புச்சீட்டான சஹாலை ஆஸியினர் குறிவைத்து அட்டாக் செய்கின்றனர். அவர்களுக்கு தெரியும், சஹால்தான் கோலியின் மிகப்பெரிய நம்பிக்கை என்று. சஹாலை வெளுத்தெடுத்தால் கோலியின் ஒட்டுமொத்த நம்பிக்கையையுமே சிதைத்துவிட முடியும். கோலிக்கும் பௌலிங் அவ்வளவுதான் இனி பேட்டிங்கில் பார்த்துக்கொள்ளலாம் என்கிற அயர்ச்சியும் உண்டாகிவிடும்.

இதை தெரிந்தே சஹால் கொஞ்சம் நன்றாக வீசிய போதும் ரிஸ்க் எடுத்து அவரை பவுண்ட்ரி அடிக்கின்றனர். இதையெல்லாம் கோலி புரிந்துகொண்டதாக தெரியவில்லை. தொடரை இழந்தாயிற்று என்பதால் குறைந்தபட்சமாக அடுத்த போட்டியில் சஹாலை பெஞ்ச்சில் உட்கார வைத்துவிட்டு குல்தீப்பை இறக்கி சின்ன சர்ப்ரைஸாவது கொடுக்கலாம்.

கோலியின் வளர்ப்பான சைனி குறித்து ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். அவர் கோலியின் அக்ரஷனை தவறாக புரிந்துகொண்டிருக்கிறார். கோலியின் அக்ரஷன் எதிரணியின் வீரர்களை எப்போதும் காயப்படுத்தாது. ஆனால், சைனி எதிரணி பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் அவரது பந்தை அடித்துவிட்டாலோ, விக்கெட் விழாவிட்டாலோ உடனே ஒரு பீமரை இறக்கிவிடுகிறார். நேற்று ஃபின்ச்சுக்கு அப்படித்தான் ஒரு பீமரை போட்டார். அதை ரொம்ப ஜாலியாக இரு அணி வீரர்களும் எடுத்துக்கொண்டனர்.

“ஆஸி தொடரில் இந்திய அணி, ‘RCB 2.O’ போல விளையாடுவது ஏன்?” : கேள்விகுள்ளாகும் கோலியின் கேப்டன்ஷிப்!

ஆனால், சைனி இந்த பீமர் வீசி பேட்ஸ்மேனை பதறவைத்து நிலைகுலைய வைத்து விக்கெட் எடுக்க வேண்டும் என்பதை ஒரு திட்டமாகவே செய்து கொண்டிருப்பதைப் போல தெரிகிறது. ஐ.பி.எல் லிலும் இப்படித்தான் இரண்டு மூன்று மேட்ச்சுகளில் விக்கெட் கிடைக்காத விரக்தியில் பீமரை போட்டு எதிரணியினரை காயப்படுத்தியிருப்பார். ஒருமுறை செய்தால் பேலன்ஸ் இல்லை எனச் சொல்லலாம். ஒவ்வொரு முறையும் சைனி இப்படி செய்து கொண்டிருக்கிறார். எதிரணி வீரரை காயப்படுத்தி ஒரு விக்கெட் எடுப்பது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் இல்லை என்பதையும் கோலிதான் சைனிக்கு புரியவைக்க வேண்டும்.

மொத்தத்தில் இந்த தொடரில் ரோஹித் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், கோலிக்கு அது நல்லதுதான். அப்படி ரோஹித் இருந்து இந்திய அணி தோற்றிருந்தால் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கோஷம் இன்னும் உக்கிரமடைந்து, கோலிக்கு மிகப்பெரிய அழுத்தமாக மாறியிருக்கும். இதை இன்னொரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் தவறுகளை திருத்திக்கொண்டு கோலி கேப்டனாக ஜொலிக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

banner

Related Stories

Related Stories