விளையாட்டு

துபாய் வெப்பத்தில் மும்பை இந்தியன்ஸ் பயிற்சி; வியர்வையால் சோர்வடையும் வீரர்கள் | வீடியோ

உடலை நீர்வற்றவிடாமல் வைத்துக்கொள்ள வீரர்கள் நிறையத் தண்ணீர் பருக அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் தெரிவித்துள்ளார்.

துபாய் வெப்பத்தில் மும்பை இந்தியன்ஸ் பயிற்சி; வியர்வையால் சோர்வடையும் வீரர்கள் | வீடியோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐபிஎல் தொடர் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவிலிருந்து துபாய்க்கு மாற்றப்பட்டது. இதனால் ஒவ்வொரு அணியின் வீரர்களும் தனி விமானம் மூலம் துபாய் சென்றடைந்தனர்.

துபாய் சென்று அங்குத் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு பின் தற்போது வீரர்கள் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். துபாய் ஒரு பாலைவன தேசம் என்பதால் அங்கு வெப்பம் மிக அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் வியர்வை சொட்ட அந்த வெப்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியினர் பயிற்சி செய்யும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

அந்த வீடியோவில் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலைக்கு உடலை பழக்கப்படுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதலில் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்கள் அங்கு நிலவும் வெப்ப அளவை யூகிக்கின்றனர்.

பின்பு அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் உள்ளிட்டோர் இது போன்ற சூழ்நிலை என்ன செய்யுமென விவரிக்கின்றனர்.

“வெப்பம் அதிகமாக இருக்கும்போது உடம் அதிகமாக வியர்க்கும். உடல் அதிகமாக வியர்க்கும்போது உங்களால் புதிய பந்தை கையில் பிடிக்க முடியாது. இது பல்வேறு பந்துவீச்சாளர்களுக்குச் சவாலாக இருக்கும்” என்கிறார் ஷேன் பாண்ட்.

உடலை நீர்வற்றவிடாமல் வைத்துக்கொள்ள வீரர்கள் நிறையத் தண்ணீர் பருக அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என ராபின் சிங் தெரிவித்துள்ளார். 2013, 2015, 2017 மற்றும் 2019 ஆகிய நான்கு ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ அணி ஐபிஎல் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories