விளையாட்டு

IPL 2020 தொடரிலிருந்து வெளியேறினார் சுரேஷ் ரெய்னா - என்ன காரணம்?

தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் 2020 தொடரிலிருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா துபாயிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ள ரெய்னா ஐபிஎல் 2020 தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்க்ஸின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாத் சார்பில் வெளியான பதிவில், “சுரேஷ் ரெய்னா சில தனிப்பட்ட காரணங்களால் இந்தியா திரும்பிவிட்டார். அவர் இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடமாட்டார். இத்தருணத்தில் சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் முழு ஆதரவைத் தருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி தோனியைத் தொடர்ந்து ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். அவர் ஐ.பி.எல் தொடரைப் பொறுத்தவரை சி.எஸ்.கே அணிக்காக 5,368 ரன்களை அடித்துள்ளார். ஒட்டுமொத்த ஐ.பி.எல் தொடரில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரெய்னா உள்ளார்.

இந்த வருட ஐ.பி.எல் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க இருக்கிறது. அதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை சூப்பர் கிங்க்ஸ் பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, அந்த அணியின் பந்துவீச்சாளர் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories