விளையாட்டு

“என் பாடலுக்கு ‘ஹெலிகாப்டர்’ என பெயர் வைத்தது சாக்‌ஷிதான்” - பிராவோ விளக்கம்!

“என்னுடைய தோனி பாடல் ஒரு சோகப் பாடலாகவோ தோனியின் பிரியாவிடை பாடலாகவோ இருக்கக்கூடாது என விரும்பினேன்.” என பிராவோ தெரிவித்துள்ளார்.

“என் பாடலுக்கு ‘ஹெலிகாப்டர்’ என பெயர் வைத்தது சாக்‌ஷிதான்” - பிராவோ விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான ட்வெய்ன் பிராவோ பாடிய தோனி பாட்டுக்கு ஏன் ‘ஹெலிகாப்டர் 7’ எனப் பெயர் வைக்கப்பட்டது என விளக்கம் அளித்துள்ளார்.

தோனியின் மனைவி சாக்‌ஷிதான் இந்த யோசனையை பிராவோவுக்கு சொன்னதாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்தப் பாடல் சாக்‌ஷியால்தான் முழுமை பெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தோனியின் 39வது பிறந்தநாளன்று பிராவோ ஒரு பாட்டை வெளியிட்டார். அந்த பாட்டுக்கு ஹெலிகாப்டர் 7 என்ற பெயர் சூட்டப்பட்டது.

இதுகுறித்துப் பேசியுள்ள பிராவோ “தோனிக்கும் அவர் மனைவிக்கும் இந்த பாடல் மிகவும் பிடித்தது. ஹெலிகாப்டர் என்று இந்த பாடலுக்கு பெயரிட்டது சாக்‌ஷிதான். இந்த பாடலுக்கு நான் நம்பர் 7 என்று பெயர் வைக்கலாம் என்று இருந்தேன். ஆனால் தனியாகத் தெரிந்தது ஹெலிகாப்டர் என்ற பெயர் மட்டுமே. இந்தப் பாடல் ஒரு மணி நேரத்தில் மில்லியன் பார்வைகளைப் பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ”நான் இசையில் முழுதாக என்னை ஈடுபடுத்தியுள்ளேன். நான் என்னுடைய இசையமைப்பு குழுவிடம் இவருக்காக ஒரு பாடல் பாட வேண்டும், அது அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக வெளியாக வேண்டும். இந்தப் பாடல் சோகப் பாடலாகவோ தோனியின் பிரியாவிடை பாடலாகவோ இருக்கக்கூடாது என விரும்பினேன்.” என பிராவோ தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான பிராவோ 113 ஐபிஎல் போட்டிகள் விளையாடி 118 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories