விளையாட்டு

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் ஹர்திக் பாண்டியா!

காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் நீண்ட காலமாகப் பாண்டியா விளையாடாமலேயே இருந்தார்.

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் ஹர்திக் பாண்டியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 30 நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து அணிகளின் வீரர்களும் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். காலம் தாழ்த்தி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்டார் வீரரான ஹர்திக் பாண்டியாவும் தயாராகி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஐபிஎல் மூலமாக நிறையச் சிறந்த வீரர்கள் கிடைத்துள்ளார்கள். அதில் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர். ஐபிஎல் மூலமாக பிசிசிஐ அமைப்பின் தேர்வுக்குழுவின் கண்களில் சிக்கிய ஹர்திக் பாண்டியாவின் திறமை, அவரை இந்திய கிரிக்கெட் அணி வரை அழைத்துச் சென்றுள்ளது.

அதே போல் 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான வீரரான ஹர்திக் பாண்டியா தற்போது முழு வீச்சில் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். அவர் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.

ஐபிஎல் தொடருக்காக காத்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்களும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களும் இந்த புகைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். ஐபிஎல் 2019 தொடரில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 400 ரன்களை அடித்தார். அவருடைய ஸ்டிரைக் ரேட் 191.42 ஆக இருந்தது. அது மட்டுமல்லாமல் 16 போட்டிகளில் அவர் 14 விக்கெட்டுகளை எடுத்தார்.

ஆனால் அதன் பின் காயம் காரணமாக நீண்ட காலமாகப் பாண்டியா விளையாடாமலேயே இருந்தார். இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாண்டியாவின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories