விளையாட்டு

வேகமெடுக்கும் கொரோனா : ஹாக்கி வீரர் மந்தீப் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்திய ஹாக்கி அணியின் முன்னணி வீரர் மந்தீப் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

வேகமெடுக்கும் கொரோனா : ஹாக்கி வீரர் மந்தீப் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய ஹாக்கி அணியின் முன்னணி வீரர் மந்தீப் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள 6வது இந்திய அணி வீரராக மந்தீப் சிங் உள்ளார் என இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜலந்தரை பூர்விகமாகக் கொண்ட மந்தீப் சிங். மேலும், அவருடன் பாதிக்கப்பட்டுள்ள மற்ற 5 இந்திய வீரர்களும் பெங்களூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வருகிறது. இந்நிலையில் இது குறித்து தேசிய விளையாட்டு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “இந்திய ஹாக்கி அணியின் உறுப்பினரான மந்தீப் சிங் மற்ற 20 வீரர்களுடன் சேர்ந்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டதை அடுத்து அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளது.

வேகமெடுக்கும் கொரோனா : ஹாக்கி வீரர் மந்தீப் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி!

மேலும் அவர் தொற்று ஏற்பட்டுள்ள மற்ற 5 வீரர்களுடன் சேர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார் என்றும் அவர்களுக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய அணியின் கேப்டன் மன்பீரித் சிங், சுரேந்தெர் குமார், ஜஸ்கரன் சிங், வருண் குமார் மற்றும் கிருஷ்ணா பஹதூர் பதக் உள்ளிட்ட மற்ற வீரர்களுக்கும் கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்குப் பிறகு இந்திய விளையாட்டு ஆணையத்தின் சிறப்பு மையத்துக்குத் திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories