விளையாட்டு

ODI தொடரையும் ரத்து செய்கிறது BCCI - கொரோனா அச்சத்தால் நாடு திரும்புகிறார்கள் தென்னாப்ரிக்கா வீரர்கள்!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ODI தொடரையும் ரத்து செய்கிறது BCCI - கொரோனா அச்சத்தால் நாடு திரும்புகிறார்கள் தென்னாப்ரிக்கா வீரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் பலியானதையடுத்து அச்சம் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டதோடு, கல்வி நிலையங்களை மூடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டு வருகின்றன.

கேரளா, பீகார், சத்தீஸ்கர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ODI தொடரையும் ரத்து செய்கிறது BCCI - கொரோனா அச்சத்தால் நாடு திரும்புகிறார்கள் தென்னாப்ரிக்கா வீரர்கள்!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தரம்சலாவில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது, இந்நிலையில் மீதமுள்ள 2 போட்டிகளும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்களே இல்லாமல் நடத்தலாம் என்று முதலில் முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்ததன் காரணமாக திடீரென இன்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

“நாடு ஒரு கொள்ளை நோயை எதிர்கொண்டிருக்கும் நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடர் ரத்து செய்யப்படுகிறது” என்று பி.சி.சி.ஐ மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் தாயகம் திரும்புகின்றனர்.

banner

Related Stories

Related Stories