விளையாட்டு

அச்சமூட்டும் கொரோனா : ISLஐ தொடர்ந்து IPL போட்டியையும் ரசிகர்கள் இல்லாமல் நடத்த BCCI திட்டம்?

IPL போட்டியை ரசிகர்கள் இல்லாமல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அச்சமூட்டும் கொரோனா : ISLஐ தொடர்ந்து IPL போட்டியையும் ரசிகர்கள் இல்லாமல் நடத்த BCCI திட்டம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதுமுள்ள மக்களை மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது. இதன் தாக்கம் விளையாட்டு உலகத்தையும் விட்டுவைக்கவில்லை. கொரோனாவால் முக்கிய விளையாட்டுகள் தடை செய்யப்பட்டும் ஒத்தி வைக்கப்பட்டும் வருகிறது.

கொரோனோ வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து மக்கள் வர தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் பணி சார்ந்து பயணிப்போரைத் தவிர மற்ற அனைவரது விசாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்
ஐபிஎல்

இந்நிலையில், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐ.பி.எல் தொடர் நடக்குமா என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பி.சி.சி.ஐ-யை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா வைரஸ் அச்சத்தால் ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

மேலும், ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது சாத்தியமா, அப்படி ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தும் பட்சத்தில் மைதான அதிகாரிகளுக்கும், ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களுக்கும் என்ன மாதிரியான சிக்கல் ஏற்படும் என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து நாளை மறுநாள் நடைபெறும் ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விசாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு வீரர்கள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

அச்சமூட்டும் கொரோனா : ISLஐ தொடர்ந்து IPL போட்டியையும் ரசிகர்கள் இல்லாமல் நடத்த BCCI திட்டம்?

ஒருபக்கம் ஐ.பி.எல் போட்டி நடத்தக்கூடாது, முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது என மகாராஷ்டிர அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், ரசிகர்கள் இல்லாமல் ஐ.பி.எல் போட்டி நடத்துவது ஏமாற்றமாக இருப்பதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

வரும் மார்ச் 29ஆம் தேதி 13வது சீசன் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க உள்ளன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் விளையாடுகின்றன.

இதற்கிடையே, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து ஆட்டத்தின் இறுதிப்போட்டி மார்ச் 14ம் தேதி சென்னையின் எஃப்சி-கொல்கத்தா அணிகளுக்கு இடையே கோவாவில் நடக்கவுள்ளது. இதனை ரசிகர்கள் இல்லாமல் நடத்தவிருப்பதாக ஐ.எஸ்.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories