விளையாட்டு

பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் நீக்கப்பட்ட தோனி - ஒதுக்கப்படுகிறாரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் நீக்கப்பட்ட தோனி - ஒதுக்கப்படுகிறாரா? ரசிகர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ. அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020ம் ஆண்டு வரையிலான ஒப்பந்த பட்டியல் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதில், A+ வீரர்களுக்கு 7 கோடியும், A பிரிவு வீரர்களுக்கு 5 கோடியும், B பிரிவு வீரர்களுக்கு 3 கோடியும், C பிரிவு 1 கோடியும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

A+ பிரிவில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜாஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ளனர். A பிரிவில் ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, புஜாரா, கே.எல்.ராகுல், ரஹானே, ஷிகார் தவான், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் நீக்கப்பட்ட தோனி - ஒதுக்கப்படுகிறாரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

B பிரிவில் உமேஷ் யாதவ், சஹால், ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், சஹாவும், C பிரிவில், கேதர் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சஹர், மணீச் பாண்டே, ஹனுமா விஹாரி, ஷர்துல் தாகூர், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால், இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் மகேந்திர சிங் தோனியின் பெயர் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் ரன் அவுட் ஆன தோனி அதன் பிறகு நடைபெற்ற எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இல்லாமல் போனது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் தோனி தனது விளையாட்டை திறம்பட வெளிப்படுத்தினால் அடுத்து வரவிருக்கும் T20 உலகக்கோப்பையில் அவர் இடம்பெறுவார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories