விளையாட்டு

T20 உலகக்கோப்பை : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மகளிர் T20 உலகக்கோப்பைக்கான இந்திய மகளிர் அணியில் 15 வயதே ஆன ஷஃபாலி வெர்மாவிற்கு இடம் கிடைத்துள்ளது. 

ஷஃபாலி வெர்மா
ஷஃபாலி வெர்மா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பாண்டில் விளையாட்டு அரங்கில் முதல் பெரிய தொடரான மகளிர் T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கி மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி நிறைவடைகிறது.

முதல் பெரிய தொடர் என்பதால், மகளிர் T20 உலகக்கோப்பை மீதான எதிர்பார்ப்பு வழக்கத்தை விட அதிகமாகவே எழுந்துள்ளது. தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேச அணிகளுடன் விளையாடுகிறது.

T20 உலகக்கோப்பை :  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு!

இந்நிலையில், உலகக்கோப்பை T20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணிக்கு கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கவுர் தலைமையிலான அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, ஹர்லீன், தீப்தி சர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஸ், தனியா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்ட்ரகர், அருந்ததி ரெட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், 15 வயதே ஆன ஷஃபாலி வெர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018 T20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை ஹர்மன்ப்ரீத் கவுர் அரையிறுதி வரை அழைத்து சென்றது நினைவுகூரத்தக்கது.

banner

Related Stories

Related Stories