விளையாட்டு

#INDVSWI : தொடரைக் கைப்பற்றப் போராடும் கோலி - அதிகரிக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு !

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி T20 போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது.

#INDVSWI : தொடரைக் கைப்பற்றப் போராடும் கோலி - அதிகரிக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியாவிற்கு சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2வது T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனால் தற்போது தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி T20 போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இரு அணிகளும் களம் இறங்குவதால் ஆட்டதில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

#INDVSWI : தொடரைக் கைப்பற்றப் போராடும் கோலி - அதிகரிக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு !

கடந்த இரண்டு தொடர்களாக இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா பெரிதளவில் சோபிக்கவில்லை. இன்றையப் போட்டி அவரது சொந்த ஊரில் நடைபெறுவதால் அவர் நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.

இந்த போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்களை கொண்டுவர வாய்ப்புள்ளது. இரண்டு ஆட்டங்களாக சொதப்பி வரும் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் அல்லது முகமது ஷமி களமிறக்கப்படலாம். அதேபோல, ரிஷப் பண்ட்க்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.

#INDVSWI : தொடரைக் கைப்பற்றப் போராடும் கோலி - அதிகரிக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு !

உத்தேச இந்திய அணி :

ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி\குல்தீப் யாதவ், தீபக் சஹர், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல்

banner

Related Stories

Related Stories