விளையாட்டு

அஸ்வினை இதற்கு தான் எங்கள் அணியில் எடுத்தோம் - டெல்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்

பஞ்சாப் அணியிலிருந்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறியுள்ளார் அஸ்வின்.

அஸ்வினை இதற்கு தான் எங்கள் அணியில் எடுத்தோம் - டெல்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

ஐ.பி.எல் தொடரில் கடந்த இரு வருடங்களாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக பங்கேற்றார் அஸ்வின். அவரது தலைமையில் பஞ்சாப் அணி 28 ஆட்டங்களில் 12-ல் வெற்றியும் 16-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி கடந்த வருடம் 7ம் இடமும் இந்த வருடம் 6ம் இடமும் பிடித்தது.

இந்நிலையில் பஞ்சாப் அணியிலிருந்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறியுள்ளார் அஸ்வின். 2018 ஏலத்தின் போது பஞ்சாப் அணி அஸ்வினை 7.60 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போது அதே தொகைக்கு டெல்லி அணிக்கு மாறியுள்ளார். 139 ஐ.பி.எல் ஆட்டங்களில் விளையாடியுள்ள அஸ்வின், 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அஸ்வினை இதற்கு தான் எங்கள் அணியில் எடுத்தோம் - டெல்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்

இந்நிலையில் டெல்லி அணியில் அஸ்வின் இணைந்தது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், ''அஸ்வின் எந்த அணியில் இருந்தாலும் அந்த அணிக்கு பலம் சேர்ப்பார்.

அதேபோல டெல்லி அணிக்கும் பலமளிப்பார். டெல்லி மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது அதனால் அஸ்வின் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார்'' எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அஸ்வின், ''பஞ்சாப் அணியில் ஆடியது சிறந்த அனுபவம். பஞ்சாப் அணியில் என்னுடன் ஆடிய சக வீரர்களை மிஸ் செய்வேன். புதிய சவால்களுக்கு காத்திருக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories