விளையாட்டு

ஐ.பி.எல் 2020 : தமிழக வீரரை கழட்டிவிடப்போகும் பிரபல அணி - கேப்டனாகும் இளம் வீரர்!

ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது.

ஐ.பி.எல் 2020 : தமிழக வீரரை கழட்டிவிடப்போகும் பிரபல அணி - கேப்டனாகும் இளம் வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

ஐ.பி.எல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தற்போது இருந்தே பல அணிகள் தங்கள் அணி வீரர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தமிழக வீரர் அஸ்வின் பஞ்சாப் அணியின் கேப்டனாக தற்போது உள்ளார். இதற்கிடையில், அடுத்த ஆண்டு அவர் டெல்லி அணிக்காக விளையாட உள்ளதாக தகவல்கள் பரவியது. இதனை டெல்லி அணி நிர்வாகம் தற்போது உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து டெல்லி கேபிட்டல்ஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அஸ்வின் குறித்த பேச்சுவார்த்தை உண்மை தான். விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.’ என்றார்.

ஐ.பி.எல் 2020 : தமிழக வீரரை கழட்டிவிடப்போகும் பிரபல அணி - கேப்டனாகும் இளம் வீரர்!

கடந்த 2 ஆண்டுகளாக அஸ்வின் தலைமையில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2018ல் 7வது இடமும் 19ல் 6வது இடத்துடன் தொடரை முடித்தது. பஞ்சாப் அணியில் இருந்து அஸ்வின் விலகியதால் அந்த அணிக்கு இந்திய அணியின் இளம் வீரரான கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories