விளையாட்டு

INDVSBAN : திட்டமிட்டபடி நடைபெறுமா முதல் T20 போட்டி : குழப்பத்தில் ரசிகர்கள்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அங்கு போட்டி நடக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

INDVSBAN : திட்டமிட்டபடி நடைபெறுமா முதல் T20 போட்டி : குழப்பத்தில் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வங்கதேச அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வங்கதேச அணி விளையாட உள்ளது. இதில் முதல் T20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது அங்கு போட்டி நடக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், விளையாடும் இடத்தை மாற்றுமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

INDVSBAN : திட்டமிட்டபடி நடைபெறுமா முதல் T20 போட்டி : குழப்பத்தில் ரசிகர்கள்!

அதில், டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து படுமோசமாகச் சென்றுகொண்டிருக்கிறது. இதை மையமாக வைத்து வீரர்கள் டெல்லி மைதானத்தில் விளையாடினால் அவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படும். முதல் போட்டிக்கான இடத்தை டெல்லிக்கு வெளியே மாற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு நாங்கள் உங்களைக் கோருகிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், முதல் டி20 டெல்லியில் நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. முன்னதாக 2017 டிசம்பரில், காற்று மாசுபாட்டால் டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது இலங்கை வீரர்கள் முகமூடிகள் அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories