விளையாட்டு

இந்தியாவிற்கு 3 தங்கப் பதக்கங்களை பெற்றுத் தந்த தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன்! - அசத்தல் சாதனை!

உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளின் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றுள்ளார்.

இந்தியாவிற்கு 3 தங்கப் பதக்கங்களை பெற்றுத் தந்த தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன்! - அசத்தல் சாதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சர்வதேச ராணுவத்திற்கான விளையாட்டு போட்டிகள் சீனாவின் வூஷான் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 140 நாடுகளைச் சேர்ந்த 9,308 பேர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா தடகளப் போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியாவின் சார்பில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் கலந்துகொண்டார். 200 மீட்டர் தூரத்தை 24.31 விநாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்தார். முதல் இடத்தைப் பிடித்த ஆனந்தன் குணசேகரனுக்கு தங்கபதக்கம் வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், ராணுவ விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் ஆனந்தன் குணசேகரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக கொலம்பியாவில் பஜார்டோ பார்டே போட்டிகளில் 26.11 விநாடிகள் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். அதேபோல் பெரு நாட்டின் நடைபெற்ற காஸா ஜோஸ் போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 27.33 விநாடிகளில் கடந்து வெண்கலப்பதக்கம் வெற்றுள்ளார். அவரின் இந்த முயற்சிகளை பலரும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories