விளையாட்டு

வங்கதேசத்துக்கு எதிரான T20 தொடரில் ஓய்வா? என்ன ஆச்சு விராட் கோலிக்கு

அடுத்த மாதம் நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான T20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.

வங்கதேசத்துக்கு எதிரான T20 தொடரில் ஓய்வா? என்ன ஆச்சு விராட் கோலிக்கு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தென் ஆப்பிரிக்கா அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் பிறகு வங்கதேசம் அணி அடுத்தமாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வங்கதேசம் விளையாட உள்ளது.

இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான T20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாட மாட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் இந்திய அணி விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் விராட் கோலி விளையாடியுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடவில்லை. விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடி வருவதால், அவருக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான T20 தொடரில் ஓய்வா? என்ன ஆச்சு விராட் கோலிக்கு

இது குறித்து பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோலி T20 தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ள இருக்கிறார். அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கும் வீரர்களின் வேலைப் பளுவை கண்காணித்து, வீரர்கள் எப்போதும் புத்துணர்வுடன் இருப்பதை கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

கோலி ஓய்வு எடுக்க உள்ள நிலையில், ரோஹித் சர்மா தான் T20 அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. T20 தொடரில் ஓய்வு பெறும் கோலி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நிச்சயம் ஆடுவார் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், இந்த டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இருப்பதால் கோலி நிச்சயமாக விளையாடுவார்.

banner

Related Stories

Related Stories