விளையாட்டு

“இதை முன்பே செய்திருந்தால் நியூசிலாந்துக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?- ஐசிசியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

சூப்பர் ஓவரிலும் ஆட்டம் சமநிலை பெற்றால் அதிக பவுண்டரிகள் அடித்த அணியே வெற்றி பெற்றதாக கருதப்படும் சர்ச்சைக்குரிய விதியை நீக்கியது ஐசிசி.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஐசிசி சார்பில் நடக்கும் அனைத்துப் போட்டிகளில் ஆட்டம் சமனில் முடிந்தால், முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடந்த 2019 உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூஸிலாந்து இடையிலான ஆட்டம் சூப்பர் ஓவரிலும் சமனில் முடிந்தது. இதனால் பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து அதிகமான பவுண்டரி அடித்திருந்ததால், அந்த அணிக்கு உலகக் கோப்பை வழங்கப்பட்டது.

பவுண்டரி அடிப்படையில் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றியாளரை தேர்வு செய்த ஐசிசி விதிமுறை மீது பலத்த விமர்சனங்கள் எழுந்தன. கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் ஐசிசியின் விதிமுறையை கடுமையாகச் சாடினர். இந்நிலையில், தற்போது அந்த விதிமுறையை ஐசிசி மாற்றியுள்ளது.

“இதை முன்பே செய்திருந்தால் நியூசிலாந்துக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?- ஐசிசியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

துபாயில் நேற்று நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது ஐசிசி.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில், "ஐசிசி கிரிக்கெட் கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில், ஐசிசி நடத்தும் போட்டிகளில் ஆட்டம் சமனில் முடிந்தால் முடிவுகளை அறிய சூப்பர் ஓவர் மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் லீக் ஆட்டங்களில் சூப்பர் ஓவர் முறையில் ஆட்டம் சமனில் முடிந்தால் அது சமனில் முடிந்ததாகவே கருத்தில் கொள்ளப்படும்.

“இதை முன்பே செய்திருந்தால் நியூசிலாந்துக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?- ஐசிசியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

நாக்-அவுட் சுற்றுகளில் இனிமேல் ஆட்டம் சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை மட்டுமே முடிவு அறியப் பயன்படுத்தப்படும், பவுண்டரிகள் அடிப்படையிலான விதிமுறை நீக்கப்படுகிறது.

அதாவது அதிகமான ரன்களை எந்த அணி அடித்து வெற்றி பெறுகிறதோ அதுவரை சூப்பர் ஓவர் முறைதான் பயன்படுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளது ஐசிசி. ரசிகர்கள் பலரும் ஐசிசி-யின் இந்த முடிவை விமர்சித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories