விளையாட்டு

தமிழ் நடிகையை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே!

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான மணிஷ் பாண்டே தமிழ் நடிகை ஒருவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் நடிகையை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கர்நாடகாவை சேர்ந்த மணிஷ் பாண்டே, இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் தனது அறிமுக ஒருநாள் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். ஆனால், அதற்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் மணிஷ் பாண்டே, திரைப்பட நடிகையான அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் நடிகையை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே!

அஷ்ரிதா ஷெட்டி மற்றும் மணிஷ் பாண்டே இருவருக்கும் வரும் டிசம்பர் 2ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. அஷ்ரிதா ஷெட்டி தமிழில் உதயம் NH4, இந்திரஜித், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories