விளையாட்டு

சிக்கலில் மாட்டிக்கொண்ட தினேஷ் கார்த்திக்..... நோட்டீஸ் அனுப்பிய பி.சி.சி.ஐ!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கிடம் விளக்கம் கேட்டு பி.சி.சி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் ஆண்டுதோறும் ஐ.பி.எல் போன்று கரீபியன் பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் துவக்க விழாவில் தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டுள்ளார்.

அவர் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான டி.கே.ஆர் அணியின் சீருடையை அணிந்து அணி வீரர்களுடன் ஓய்வறையில் அமர்ந்திருந்த போட்டோ இணையத்தில் வலம் வந்தன.

இந்நிலையில் இவ்விவகாரம் தினேஷ் கார்த்திக்கிற்கு எதிராக திரும்பியுள்ளது. உரிய அனுமதி பெறாமல் வெளிநாட்டில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி அவருக்கு பி.சி.சி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்காக ஒரு வாரகாலம் அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டி.கே.ஆர் அணியின் உரிமையாளர்களும். அதன் அடிப்படையில் தினேஷ் கார்த்திக் அங்கு சென்றிருந்திருக்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories