விளையாட்டு

மனைவி கொடுத்த துன்புறுத்தல் புகார் - மே.இ தீவுகள் கிரிக்கெட் தொடரில் இருக்கும் ஷமி கைதாகிறாரா?

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை கைது செய்வதற்கு மேற்குவங்க நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனைவி கொடுத்த துன்புறுத்தல் புகார் - மே.இ தீவுகள் கிரிக்கெட் தொடரில் இருக்கும் ஷமி கைதாகிறாரா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் முகமது ஷமி. இவரது மனைவி ஹசின் ஜகான், ஷமி தம்மை வீட்டில் அடைத்து துன்புறுத்துவதாக மீது கொல்கத்தா காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பான விசாரணை கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி பலமுறை உத்தரவிட்ட போதும் இருவரும் ஆஜராகவில்லை.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசரணைக்கு வந்தபோது வழக்கில் ஆஜராகாத முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹசித் அகமது இருவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் முகமது சமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் உள்ள இந்திய அணியுடன் சமி உள்ளார். அனைத்து போட்டிகளும் முடிந்த நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் இந்திய அணி நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. முகமது சமி விமான நிலையத்தில் வைத்தே போலீசார் கைது செய்யபடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories