விளையாட்டு

தோனியின் சாதனையை 11 டெஸ்ட் போட்டிகளிலேயே முறியடித்த ரிஷப் பண்ட்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனியின் சாதனையை இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.

தோனியின் சாதனையை 11 டெஸ்ட் போட்டிகளிலேயே முறியடித்த ரிஷப் பண்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இஷாந்த் சர்மா வீசிய பந்தில் பிராத்வெய்ட்டின் 'கேட்ச்சை பிடித்ததன் மூலம் விரைவாக 50 டிஸ்மிஸல்களை செய்த இந்திய வீரர் எனும் சாதனையை எட்டினார் ரிஷப் பண்ட்.

இதற்கு முன்னர், 15 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 50 'டிஸ்மிஸல்'களைச் செய்ததே இந்திய வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது. ரிஷப் பண்ட் தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 11வது டெஸ்ட் போட்டியில் விளையாடும்போதே தனது 50வது டிஸ்மிஸலை செய்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 11 கேட்சுகளை பிடித்தார் ரிஷப் பண்ட். இதன் மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிகமான கேட்சுகளைப் பிடித்த தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், இங்கிலாந்தின் ஜேக் ரஸல் ஆகியோரின் சாதனையைச் சமன் செய்தார் ரிஷப் பண்ட்.

தோனியின் சாதனையை 11 டெஸ்ட் போட்டிகளிலேயே முறியடித்த ரிஷப் பண்ட்!

சமீபத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது T20 ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ரிஷப் பண்ட் 42 பந்துகளில் 65 ரன்கள் குவித்ததன்மூலம், விக்கெட் கீப்பர்களில் அதிகபட்சமாக 56 ரன்கள் அடித்திருந்த தோனியின் சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

தோனி, அணியில் இடம்பிடிக்காத நிலையில், அவருக்கு சிறந்த பதிலியாகச் செயல்பட்டு வருகிறார் ரிஷப் பண்ட். குறைவான போட்டிகளில் மட்டுமே விக்கெட் கீப்பராக செயல்பட்டிருந்தாலும் பல சாதனைகளைப் படைத்து வரும் ரிஷப் பண்ட்டுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

banner

Related Stories

Related Stories