விளையாட்டு

60 ஆண்டுகள்... 7000 விக்கெட்டுகள் : ஓய்வை அறிவித்த 85 வயது கிரிக்கெட் வீரர் சிசில் ரைட் !

60 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல் பந்துவீசிய சிசில் ரைட்டின் கைகள் இனி ஓய்வெடுக்கப் போகின்றன.

60 ஆண்டுகள்... 7000 விக்கெட்டுகள் : ஓய்வை அறிவித்த 85 வயது கிரிக்கெட் வீரர் சிசில் ரைட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிசில் ரைட், ஒருவழியாக தனது ஓய்வை அறிவித்துள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல் பந்து வீசிய அவரது கைகள் இனி ஓய்வெடுக்கப் போகின்றன.

சிசில் ரைட், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ், பிராங்க் வொரெல் ஆகியோரைப் போல ஜாம்பவனாகப் போற்றப்படவில்லை. ஆனால், அவர்கள் எல்லாம் செய்யாத ஒன்றை நிகழ்த்திக் காட்டியுள்ளார். ஆம், மிக அதிக காலம் கிரிக்கெட்டில் நீடித்தவர்களின் பட்டியலில் சிசிலின் பெயர் நிச்சயம் இடம்பெறும்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளரான சிசில் வரும் செப்டம்பர் 7ம் தேதியோடு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அவர் இந்த ஓய்வு முடிவை எடுத்திருப்பது அவரது 85வது வயதில்.

விவியன் ரிச்சர்ட்ஸ், ஜோயல் கார்னர் ஆகியோருடன் விளையாடிய அனுபவம் கொண்ட சிசில், மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் 1970, 80-களில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராகச் செயல்பட்டார்.

60 ஆண்டுகள்... 7000 விக்கெட்டுகள் : ஓய்வை அறிவித்த 85 வயது கிரிக்கெட் வீரர் சிசில் ரைட் !

60 ஆண்டுகளுக்கும் மேலான தனது பல்வேறு வகையிலான ஆட்டங்களின் மூலம் 7,000 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு கட்டத்தில் அசுரத்தனமாக விளையாடி ஐந்து சீசன்களில் 538 விக்கெட்டுகளை வீழ்த்திய அற்புதமெல்லாம் நிகழ்ந்தது. அதாவது, ஒவ்வொரு 27 பந்துகளுக்கும் ஒரு விக்கெட் என்கிற ரீதியில் இருந்தது அவரது பந்துவீச்சு சராசரி.

சிசில் ரைட், தொடக்கத்தில் ஜமைக்கா அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினார். பின்னர், 1959ம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு ஒரு அமைப்பில் தொழில்முறை கிரிக்கெட்டராக இணைந்து பல ஆண்டுகள் விளையாடினார். தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் விளையாடிய சிசில் தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories