விளையாட்டு

தனுஷ் பட பாடலை பாடிய பாண்டியா சகோதரர்கள் : வைரல் வீடியோ

கொலைவெறி பாடலை இந்திய அணியின் வீரர்களான பாண்டியா சகோதரர்கள் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தனுஷ் பட பாடலை பாடிய பாண்டியா சகோதரர்கள் : வைரல் வீடியோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2012ம் ஆண்டில் வெளியான படம் '3'. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய இந்தப் படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இடம்பெற்ற கொலைவெறி பாடல் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் பாடல் யுடியூபில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் 'கொலைவெறி' பாடலை இந்திய அணியின் வீரர்களான பாண்டியா சகோதரர்கள் பாடி உள்ளனர். பாண்டியா சகோதரர்கள் இருவரும் இணைந்து 'கொலைவெறி' பாடலை கைபேசியை பார்த்தவாறு படுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ‘கொலவெறி’ பாடல் மீண்டும் பாண்டியா சகோதரர்களால் மீண்டும் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

banner

Related Stories

Related Stories