விளையாட்டு

”தோற்றாலும் எங்களின் ஹீரோ நீங்கள்” - கேன் வில்லயம்சனுக்கு பிறந்த்நாள் கேக் எடுத்து வந்த இலங்கை ரசிகர்கள்

நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தன்னுடைய 29வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

”தோற்றாலும் எங்களின் ஹீரோ நீங்கள்” - கேன் வில்லயம்சனுக்கு பிறந்த்நாள் கேக் எடுத்து வந்த இலங்கை ரசிகர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட்,3 T20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதையடுத்து இலங்கை பிரசிடெண்ட் லெவன் அணியுடன் நியூசிலாந்து அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்நிலையில், நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தனது 29வது பிறந்தநாள் நேற்று கொண்டாடினார்.

பயிற்சி ஆட்டத்தை காண வந்த ரசிகர்கள் கேன் வில்லியம்சனுக்கு பிறந்தநாள் கேக் எடுத்து வந்தனர். ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கேன் வில்லியம்சன் போட்டியின் நடுவே கேக் வெட்டி 29வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த சம்பவம் இலங்கை ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்த போதிலும் அவர் பதற்றமடையாது சிரித்த முகத்துடன் இருந்தார். தனது அணியையும் சிறப்பான முறையில் வழி நடத்தினார். இதனால் உலககோப்பைக்கு பிறகு கேன் வில்லியம்சனுக்கு ரசிகர்கள் அதிகமாகினர்.

இந்நிலையில், கேன் வில்லியம்சன் ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

banner

Related Stories

Related Stories