விளையாட்டு

நான் நாட்டிற்காக விளையாடுகிறேன்; அணிக்காக அல்ல - ரோகித் சர்மாவின் இந்த ட்வீட் யாருக்காக?

இந்தியாவின் உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்த சில நாட்களிலேயே, இந்திய அணிக்குள் பிளவு இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

நான் நாட்டிற்காக விளையாடுகிறேன்; அணிக்காக அல்ல - ரோகித் சர்மாவின் இந்த ட்வீட் யாருக்காக?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகக்கோப்பையை நிச்சயம் இந்தியாதான் வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்தியாவின் உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்த சில நாட்களிலேயே, இந்திய அணிக்குள் பிளவு இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

அதில், ரோஹித்தின் யோசனைகளை விராட் கோலி கேட்கவில்லை என்றும், இந்திய கிரிக்கெட் அணியில் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும் ரோஹித்துக்கு ஆதரவாக சில வீரர்களும் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் இந்திய அணியின் கேப்டன்சியை ரோஹித் சர்மாவிடம் வழங்க பி.சி.சி.ஐ ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியானது.

கடந்த வாரம், கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டார். இந்தச் செய்தி நெட்டிசன்கள் மத்தியில் வேகமாகப் பரவியது. இந்நிகழ்வு கோலி - ரோகித் இடையே பனிப்போர் நிலவி வருவதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது.

கடந்த 29ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தபோது ரோகித் சர்மாவுடன் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான செய்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த விராட் கோலி, ”எங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை. இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் யார் பயனடைகிறார்கள் எனத் தெரியவில்லை.” என்றுத் தெரிவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் செல்வதற்கு முன் விராட் கோலி இந்திய அணியின் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அந்த செல்ஃபியில் ராகுல், சுந்தர், மனிஷ் பாண்டே, கலீல் அகமது மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் இருந்தனர். ஆனால், அந்த செல்ஃபியில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. இதைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கும் ரோஹித் சர்மாவிற்கும் எந்தவித பிரச்சனையும் இல்லையென்றால் ஏன் அவருடன் புகைப்படம் எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், ரோகித் சர்மா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு, இணையத்தில் வைரலாகி உள்ளது. ”ஒவ்வொரு முறை களத்திற்கு வரும் போதும் அணிக்காக வருவதில்லை, நாட்டிற்காக தான் வருகிறேன்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்த ட்வீட்டை யாருக்காக போட்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. கோலி ரோகித் இடையே ஏதும் பிரச்சனை இல்லை என்று கூறப்பட்டு வந்தாலும், அவர்கள் இருவரிடையே இன்னும் பிரச்னை இருந்து வருகிறது என ரசிகர்கள் சந்தேகம் கிளப்பிய வண்ணம் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories