விளையாட்டு

முதலாளி தோரணையில் கோலி, ரவி சாஸ்திரி : ரோஹித் பின் திரளும் மற்ற வீரர்கள் ? - இந்திய அணியில் பிளவா ?!

பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் செயல்பாட்டால், இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டிருந்தாக இந்தியில் வெளிவரும் டைனிக் ஜாக்ரன் என்ற நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

முதலாளி தோரணையில் கோலி, ரவி சாஸ்திரி : ரோஹித் பின் திரளும் மற்ற வீரர்கள் ? - இந்திய அணியில் பிளவா ?!
 • Twitter
 • Facebook
 • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகக்கோப்பை 2019ஐ நிச்சயம் இந்தியாதான் வெல்லும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்தியாவின் உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்த மூன்று நாட்களிலேயே, இந்திய அணிக்குள் பிளவு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலாளி தோரணையில் கோலி, ரவி சாஸ்திரி : ரோஹித் பின் திரளும் மற்ற வீரர்கள் ? - இந்திய அணியில் பிளவா ?!

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய பேச்சைக் கேட்டும் நடக்கும் வீரர்களுக்கு அணியில் முன்னுரிமை தருவதாகவும், ரோஹித் சர்மா அறிவுறுத்தும் வீரர்களை தேர்வு செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா இருவரும் தவிர்க்க முடியாதவர்கள், எனவே இவர்களைத் தேர்வு செய்யாமல் இருக்க முடியாது.

முதலாளி தோரணையில் கோலி, ரவி சாஸ்திரி : ரோஹித் பின் திரளும் மற்ற வீரர்கள் ? - இந்திய அணியில் பிளவா ?!

ஆனால், மற்ற வீரர்கள் தேர்வு செய்யும் விதத்தில் சார்புத்தன்மை கையில் எடுக்கப்படுகிறது. குறிப்பாக விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் குறிப்பிட்ட சார்புடனும், விளையாடும் 11 வீரர்களைத் தேர்வு செய்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக மிகவும் மோசமாக செயல்பட்டபோதிலும்கூட அவருக்கு விராட் கோலியின் ஆதரவு இருந்ததால், அவர் தொடர்ந்து அணியில் நீடித்தார். 4-வது வரிசைக்கு என தேர்வு செய்யப்பட்ட ராகுல், தவானின் காயத்தால் தொடக்க வீரராக அனுப்பப்பட்டார்.

தொடக்க வீரராக வந்த மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்புத் தரப்படவில்லை. இதேபோல சாஹல் ஐ.பி.எல் போட்டியில் விராட் கோலியின் ஆர்.சி.பி அணியில் இருப்பதால், தொடர்ந்து மோசமாகப் பந்துவீசியபோதிலும் அவர் இந்திய அணியில் தக்கவைக்கப்படுகிறார். கோலியின் ஆதரவால் தொடர்ந்து வாய்ப்பு பெற்றுள்ளார்.

முதலாளி தோரணையில் கோலி, ரவி சாஸ்திரி : ரோஹித் பின் திரளும் மற்ற வீரர்கள் ? - இந்திய அணியில் பிளவா ?!

அணி வீரர்களுக்கு இடையே எழுந்துள்ள ஈகோ பிரச்சினை இன்னும் பெரிதாகவில்லை, விரைவில் இதுதொடர்பாக எந்த வீரராவது பேசும்போது அது பெரிதான அளவுக்கு வெடிக்கும். பல வீரர்கள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணையும் விரும்பவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து இருவரும் வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

குறிப்பாக பி.சி.சி.ஐ நிர்வகிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் ஆதரவை கோலி பெற்றிருப்பதால் சாஸ்திரி, விராட் கோலி எந்தவிதமான முடிவுகளை எடுத்தாலும், அதற்கு ஆதரவு இருந்து வருகிறது என்று அந்த நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்கு தயாராகும் வகையில் ரோஹித் சர்மாவை புதிய கேப்டனாக உருவாக்க வேண்டும் என்றும் வீரர்களிடையே பேசப்படுவதாகவும் அந்த நாளாடு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தோல்வியின் அதிர்ச்சியில் இருக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த செய்தி மிகப்பெரிய மன வருத்தத்தை உருவாக்கியுள்ளது. எனவே, அணியில் என்ன பிரச்னை இருக்கிறது, அணியின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது குறித்த உண்மைகளை ரசிகர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories